ரேஷன் கார்டில் திருத்தம் செய்வது ஈசி.. ஜூலை 11- இல் நடக்கும் பிரம்மாண்ட முகாம்.. முழு விவரம் உள்ளே!
Ration Card Correction Camp : சென்னை யில் 16 மண்டலங்களில் ரேஷன் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் வருகிற ஜூலை 11- ஆம் தேதி நடைபெற உள்ளதாக உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது .
சென்னையில் வருகிற ஜூலை 11- ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் நடைபெறும் இந்த முகாமானது பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெரும் வகையில் தமிழக முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளதன் அடிப்படையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, 2026 ஜூலை மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஜூலை 11- ஆம் தேதி ( சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரேஷன் அட்டை தொடர்பான திருத்தம்
இந்த பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு செய்தல் மற்றும் செல்போன் எண் மாற்றம் செய்தல் உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், ரேஷன் அட்டை தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ள இருக்கும் பொது மக்கள் பங்கேற்று பயன் பெறலாம். மேலும், நியாய விலை கடைகளில் ரேஷன் பொருட்கள் பெறுவதற்காக நேரில் வருகை தர முடியாத வயது முதிர்ந்த பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: ஆபத்தில் முடிந்த அதிவேக பயணம்.. 3 பேருடன் சென்ற பைக் விபத்து.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த இளைஞர்!




புகார்கள் தொடர்பாகவும் மனு அளிக்கலாம்
பொது விநியோகத் திட்ட கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் உள்ளிட்டவை குறித்த புகார்கள் ஏதேனும் இருந்தால் அது தொடர்பாகவும் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் தெரிவித்து பயன்பெறலாம். அந்த புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய காலத்தில் தீர்வு செய்யப்படும். அரசு சேவைகள் பதிவு செய்யப்பட்ட செல்போன்களில் பெறப்படும் ஓடிபி ( கடவுச்சொல்) வழியாக சேவைகள் மேற்கொள்ளப்படும் என்பதால் ரேஷன் அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாமில் பங்கேற்க வேண்டும்.
16 மண்டலங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்
சென்னையில் 16 மண்டலங்களில் நடைபெறும் இந்த முகாமில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகள் மற்றும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: சாலையோரம் நின்ற லாரி.. அதிவேகமாக வந்த R15 பைக்.. கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து.. அடுத்து நிகழந்த சோகம்!