AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜகவின் குறைப்பிரசவ ஆட்சி அமைந்துள்ளது.. நாராயணசாமி கடும் அட்டாக்!

Narayanasamy Critisize NR Congress BJP Government: புதுச்சேரி மாநிலத்தில் என். ஆர். காங்கிரஸ், பாஜகவின் குறை பிரசவ கூட்டணி ஆட்சி அமைந்திருப்பதாகவும், இந்த கூட்டணி அரசு வெகு நாள்கள் நீடிக்காது என்று முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி குற்றம் சாட்டினார்.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜகவின் குறைப்பிரசவ ஆட்சி அமைந்துள்ளது.. நாராயணசாமி கடும் அட்டாக்!
புதுச்சேரியில் குறைப்பிரசவ ஆட்சி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 08 Jul 2026 16:15 PM IST

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரும்பினார். ஆனால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் திமுக கூட்டணியில் நீடிக்காமல் வெளியேறினால் அது தற்கொலைக்கு சமம் என்று தெரிவித்தனர். இதன் காரணமாக, திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் சந்தித்து தற்கொலை செய்து கொண்டோம். இதில், இருந்து நாம் பாடம் கற்க வேண்டும். காங்கிரஸ் கட்சி தன்னைத் தானே சுய பரிசோதனை செய்ய வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் நமது தோல்வி குறித்து ஆராய வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருந்த தொகுதிகளை திமுக விட்டு தரவில்லை. இதன் காரணமாகவே நாம் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளோம்.

காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரிக்கு பல திட்டங்கள்

புதுச்சேரி மாநிலம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் வளர்ச்சியை சந்தித்தது. இந்த மாநிலத்தில் காங்கிரசும் ஆட்சியில் இருந்துள்ளது. சில முறை எதிர்க்கட்சிகளும் ஆட்சியில் இருந்துள்ளது. அந்த காலத்திலும் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்துள்ளது. நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் காலத்தில் புதுச்சேரிக்கு பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. ஒரு காலத்தில் புதுச்சேரி காங்கிரசாரை பார்த்து தமிழக காங்கிரசார் பொறாமைப்படும் நிலை இருந்தது.

மேலும் படிக்க: புதிய ரேஷன் கார்டு எப்போது வரும்? தேதி குறித்த அமைச்சர் வெங்கட்ரமணன்!

புதுச்சேரியில் குறை பிரசவ ஆட்சி அமைந்துள்ளது

புதுச்சேரி மாநிலத்தில் என். ஆர். காங்கிரஸ், பாஜக ஆட்சி அமைந்து தற்போது வரை அமைச்சர்களுக்கு இலாகா வழங்கப்படவில்லை. இந்த ஆட்சியில் புதுச்சேரி மாநிலம் கேட்பாரற்று கிடக்கிறது. கடந்த 2 மாதங்களாக யாருக்கு எந்த எலாக என தெரியாது நிலை தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து கட்சிகளையும் அரவணைத்து சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். இவரிடமிருந்து என். ஆர். காங்கிரஸ், பாஜக பாடம் கற்க வேண்டும். புதுச்சேரியில் தற்போது குறை பிரசவ ஆட்சி அமைந்துள்ளது. இது நீண்ட காலம் நீடிக்காது.

காங்கிரஸ் கட்சியை இணைந்து வலுப்படுத்துவோம்

அதிகார போட்டி, பங்கு பிரிப்பதில் என். ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மோதல் இருந்து வருகிறது. 2 மாதத்திலேயே இந்த கூட்டணியை மக்கள் வெறுத்து உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இணைந்து செயல்பட்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவோம். புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. இதற்கு யாரும் பதில் கூறுவதில்லை. 5 மாதங்களாக இலவச அரிசி வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: இனி மருத்துவமனையில் கியூல நிற்க வேண்டாம்… வந்தாச்சு தமிழக அரசின் நலம் ஏஐ

Follow Us