AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பூஜ்ஜியமாக குறைந்த யானை உயிரிழப்பு விகிதம்.. மாற்றத்தை ஏற்படுத்திய ஏஐ கண்காணிப்பு மையம்.. குவியும் பாரட்டுகள்!

Zero Elephant Death Rate | கோயம்புத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டாரா பகுதிகளில் தண்டவாளத்தை கடக்கும்போது யானைகள் உயிரிழப்பது தொடர்கதையாக இருந்து வந்தது. இந்த நிலையில், ஏஐ கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட நிலையில் அது பூஜ்ஜியமாக குறைந்துள்ளது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பூஜ்ஜியமாக குறைந்த யானை உயிரிழப்பு விகிதம்.. மாற்றத்தை ஏற்படுத்திய ஏஐ கண்காணிப்பு மையம்.. குவியும் பாரட்டுகள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 08 Jul 2026 15:57 PM IST

மதுக்கரை, ஜூலை 08 : கோயம்புத்தூரில் (Coimbatore) செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் வசதியுடன் யானைகள் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்ட பிறகு, ரயில்கள் மோதி யானைகள் உயிரிழப்பது பூஜ்ஜியமாக குறைந்துள்ளது என்று ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். யானைகளை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. யானைகளின் உயிரை காப்பாற்றும் இந்த அசத்தல் அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

யானைகளை பாதுகாக்க ஏஐ உதவியுடன் அமைகப்பட்ட புதிய அம்சம்

கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அருகில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள், ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில்கள் மோதி பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தான், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் யானைகளின் மரணத்தை தடுக்க புதிய  முயற்சி கையில் எடுக்கபட்டது.

இதையும் படிங்ஜ : உரசும் விசிக.. நெருங்கும் பாமக.. தவெக கூட்டணியின் அதிரடி நகர்வுகள்.. அடுத்தடுத்த ட்விஸ்ட்!

யானைகள் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம்

அதாவது, யானைகள் ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பதை தடுக்க கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரையில் செயற்கை நுண்ணறிவு அம்சத்துடன் கூடிய யானைகள் கட்டுப்பாட்டு மையம் மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டது. இந்த திட்டம் வெறும் 2.5 ஆண்டுகளில் சுமார் 9,481 யானைகள் நடமாடும் இடங்களில் அமைக்கப்பட்டதாகவும், அந்த இடங்களில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழப்பது பூஜ்ஜியமாக குறைந்துள்ளதாகவும் ஐஏஎஸ் சுப்ரியா சாகு தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : இனி மருத்துவமனையில் கியூல நிற்க வேண்டாம்… வந்தாச்சு தமிழக அரசின் நலம் ஏஐ

ஐஏஎஸ் சுப்ரியா சாகு எக்ஸ் பதிவு

இந்த அம்சத்தின் மூலம் இதுவரை 7,116 எச்சரிக்கைகள் ரயில்வே அதிகாரிகள் மற்றும் லோகோ பைலட்டுகளுக்கு சென்றுள்ளதாகவும், 3,821 முறை யானைகள் தண்டவாளத்தை கடக்க ரயில்கள் நிறுத்தப்பட்டு, அல்லது மெதுவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார். யானைகள் மட்டுமன்றி மான்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகளையும் இந்த அம்சம் பாதுகாத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Follow Us