அமேசான் பிரைம் டே: எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு 50% வரை தள்ளுபடி – விவரம் இதோ
Amazon Prime Day Sale : முன்னணி ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் பிரைம் டே என்ற பெயரில் தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது . அமேசானிலன் பிரைம் டே சேல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் பிரைம் டே என்ற பெயரில் தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதுபோன்ற தள்ளுபடி விற்பனை அறிவிக்கும்போது மக்கள் பொதுவாக மொபைல் போன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ஃபேஷன் பொருட்களை வாங்கவே அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். இருப்பினும், கடந்த சில காலமாக இகாமர்ஸ் தளங்கள் மூலம் பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த 2026 ஆம் ஆண்டு அமேசான் பிரைம் டே விற்பனையிலும் பைக்குகள் இடம்பெற்றுள்ளன.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு 50% வரை தள்ளுபடி
அமேசானிலன் பிரைம் டே சேல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எலக்ட்ரிக் பைக்குகள் வாங்கத் திட்டமிட்டிருந்தால், இந்த வாய்ப்பு உங்களுக்கு பெரிதும் கைகொடுக்கும்.
அந்த வகையில் பிரைம் டே விற்பனையில் கிரீன் விஸ்டா (Green Vista) எலக்ட்ரிக் பைக்குகளுக்கு சிறந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1.5 லட்சம் ரூபாய் விலை கொண்ட இந்த பைக், தற்போது 65,999 ரூபாய் என்ற சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த பைக் தினமும் குறைந்த தூரம் பயணம் செய்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த பைக் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. மேலும், இந்த வாகனத்தை ஓட்டுவதற்கு லைசென்ஸ் தேவையில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும்.




இதையும் படிக்க : வாகனங்களின் இன்ஜினை பழுதாக்கும் E20 பெட்ரோல்?.. மத்திய அரசு விளக்கம்!
அடுத்த முக்கிய சலுகையாக, ஈஓஎக்ஸ் (EOX) பிராண்டின் ஸ்கூட்டர் அமேசான் பிரைம் டே விற்பனையில் இடம் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் 47 AH திறன் கொண்ட பைக்கிற்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. முன்பு 1,29,998 ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த வாகனம், தற்போதைய சலுகையின்படி 94,998 ரூபாய்க்குக் கிடைக்கிறது. கழற்றி மாற்றக்கூடிய லித்தியம்-அயன் பேட்டரி வசதி கொண்ட மாடலுக்கே இந்தச் சலுகை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. நகருக்குள் அதிகம் பயணம் செய்பவர்கள் இந்த மாடலைத் தேர்ந்தெடுக்கலாம்.
முன்னணி எல்க்ட்ரிக் பைக் நிறுவனமான கோமாகி (Komaki) பல்வேறு மாடல்களுக்கும் இந்த விற்பனையில் சிறந்த சலுகைகள் உள்ளன. இப்போது நீங்கள் கோமாகியின் X-One Smart என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 24 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் வாங்கலாம். ரூ. 49,999 விலையுள்ள இந்த பைக், தற்போது வெறும் ரூ. 37,999 என்ற சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 25 கிமீ வரை பயணிக்க முடியும். குறைந்த வேகத்தில் இயங்கும் இந்த வாகனத்தை ஓட்டுவதற்கு லைசென்ஸ் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : வருமான வரி தாக்கல் செய்ய போறீங்களா? புதியதாக கார் வாங்கி இருந்தால் உங்களுக்கு ரூ.10,000.. இத தெரிஞ்சுக்கோங்க!
அமேசானில் ஜூலை 6, 2026 தேதி வரை பிரைம் டே விற்பனை நடைபெறுகிறது. பல்வேறு பிராண்டுகளின் சலுகைகளுக்கு மேலதிகமாக, ஆக்சிஸ் வங்கி மற்றும் எஸ்பிஐ போன்ற வங்கிகளின் கார்டுகளைப் பயன்படுத்தும்போதும் சிறந்த தள்ளுபடிகள் கிடைக்கும். இந்தச் சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்பதால், முடிந்தவரை விரைவாக வாங்க முயற்சிக்கவும். வாடிக்கையாளர் கருத்துகள் , வாகனத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனையாளர் குறித்த விவரங்களை நன்கு பரிசீலித்த பிறகு உங்கள் ஆர்டரை மேற்கொள்ளவும்.