AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல் 2026.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. எப்போது வரை?

OnePlus Community Sale 2026 | ஒன்பிளஸ் நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்கான தனது கம்யூனிட்டி சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் சில ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பது குறித்து பார்க்கலாம்.

ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல் 2026.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. எப்போது வரை?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Jun 2026 21:49 PM IST

இந்தியாவில் அதிக மக்கள் ஒன்பிளஸ் (OnePlus) ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், அந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு அட்டகாசமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், தற்போது கம்யூனிட்டி சேல் 2026 (OnePlus Community Sale 2026) அறிவித்துள்ளது. ஜூன் 04, 2026 முதல் ஜூன் 10, 2026 வரை இந்த சேல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்த சேலில் எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல் 2026 – எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு சலுகை

  • ரூ.77,999 மதிப்பிலான ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை ரூ.3,000 உடனடி தள்ளுபடியுடன் வாங்கிக்கொள்ளலாம். இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.74,999-க்கு வாங்கிக்கொள்ளலாம்.
  • ரூ.54,999 மதிப்புள்ள ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனை ரூ.3,000 தள்ளுபடியுடன் பெறலாம். இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.51,999-க்கு வாங்கிக்கொள்ளலாம்.
  • ரூ.69,999 மதிப்பிலான ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் தற்போது விலை குறைப்பு மற்றும் ரூ.5,000 வங்கி தள்ளுபடிக்கு பிறகு இதனை வெறும் ரூ.52,999-க்கு வாங்கிக்கொள்ளலாம்.
  • ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் தற்காலிகமாக ரூ.2,000 விலை குறைப்பை பெற்றுள்ளது. இதனுடன் ரூ.3,000 வங்கி தள்ளுபடியும் கிடைப்பதால் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.49,999-க்கு வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : 16 வயது வரை சோஷியல் மீடியா தடை.. அதிரடியாக அறிவித்த மலேசியா.. இது பயன் தருமா?

நோர்டு சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கான தள்ளுபடிகள்

  • ரூ.42,999 மதிப்பிலான ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனுக்கு ரூ.2,000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.40,999-க்கு வாங்கிக்கொள்ளலாம்.
  • ரூ.31,999 மதிப்பிலான ஒன்பிளஸ் நோர்டு சிஇ6 ஸ்மார்ட்போனுக்கு  ரூ.2,000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.29,999-க்கு வாங்கிக்கொள்ளலாம்.
  • ரூ.22,999 மதிப்பிலான ஒன்பிளஸ் நோர்டு சிஇ6 லைட் ஸ்மார்ட்போனுக்கு ரூ.1,500 வங்கி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.21,499-க்கு வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : ஏன் 5ஜியால் போன் பேட்டரி வேகமாக காலியாகுது தெரியுமா? எப்படி தவிர்ப்பது?

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் நபர்கள் இந்த சேலை பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us