AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிளிப்கார்டில் ஐபோன் 17-ஐ ரூ.60,000-க்கே வாங்கலாம்.. எப்படி தெரியுமா?

Buy iPhone 17 for 60,000 Rupees on Flipkart | பண்டிகை காலம் என்பதால் இ காமர்ஸ் நிறுவனங்கள் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், பிளிப்கார்ட் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் 17-ஐ வெறும் ரூ.60,000-க்கு வழங்குகிறது.

பிளிப்கார்டில் ஐபோன் 17-ஐ ரூ.60,000-க்கே வாங்கலாம்.. எப்படி தெரியுமா?
ஐபோன் 17
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Nov 2026 17:03 PM IST

ஆப்பிள் (Apple) நிறுவனம் கடந்த ஆண்டு தனது ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Apple iPhone 17 Series Smartphones) அறிமுகம் செய்தது. வழக்கம் போல அட்டகாசமான ஐபோன் 17, 17 பிளஸ், 17 ப்ரோ மற்றும் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதனுடன் இணைந்து ஐபோன் ஏர் ஸ்மார்ட்போனையும் (iPhone Air Smartphone) அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஒரு விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும், சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் விலைகளை உயர்த்தியதன் காரணமாக மீண்டும் விலை உயர்வை சந்தித்தது. அதாவது, ஐபோன் 17 ரூ.1 லட்சம் வரை விலை உயர்வை சந்தித்தது.

இந்த சூழலில், ஐபோன் 17-ஐ (iPhone 17) நீங்கள் வெறும் ரூ.60,000 வாங்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா?. உண்மை தான், ஐபோன் 17 ஸ்மார்ட்போனை பிளிப்கார்டில் (Flipkart) நீங்கள் வெறும் ரூ.60,000 வாங்கலாம். அது எப்படி, என்ன தள்ளுபடி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : ஐபோன் Duo-க்கு Shortage.. இப்போது ஆர்டர் செய்தால் 2027-ல் தான் கிடைக்கும்.. ஆப்பிள் கூறுவது என்ன?

ஐபோன் 17 : பிளிப்கார்டில் ரூ.60,000-க்கு வாங்குவது எப்படி?

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 ஸ்மார்ட்போனின் விலையை உயர்த்தியதன் காரணமாக அது தற்போது ரூ.99,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் 3 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. அதன் மூலம் ஐபோன் 17 ஸ்மார்ட்போனின் விலை ரூ.97,300 ஆக குறையும். இதுவே வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகளை நீங்கள் பயன்படுத்தும் போது ஐபோன் 17-ஐ நீங்கள் வெறும் ரூ.59,034-க்கு வாங்கிக்கொள்ளலாம்.

எந்த எந்த வங்கிகளுக்கு தள்ளுபடி

ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ரூ.7,061 உடனடி தள்ளுபடி பெறலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டில் ரூ.7,000 உடனடி தள்ளுபடி பெறலாம். இதுவே, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் 7,000 உடனடி தள்ளுபடி பெறலாம். இது தவிர பழைய ஐபோனை எக்ஸ்சேஞ் செய்து ஐபோன்களை வாங்கலாம். அதாவது, பிளிப்கார்டில் ஐபோன் 15-க்கு ரூ.31,250-க்கு எக்ஸ்சேஞ் பெறலாம்.

இதையும் படிங்க : தீபாவளிக்கு அமேசானில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. என்ன என்ன ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி?

ஐபோன் 17-ஐ வெறும் ரூ.59,034-க்கு வாங்கலாம்

இந்த ஐபோன் 17 ஸ்மார்ட்போனை, ஐபோன் 15 ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்வது மற்றும் ஐசிஐசிஐ அல்லது எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.99,900 மதிப்பிலான ஐபோனை வெறும் ரூ.59,034-க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனை மூன்று மாதங்கள் மாத தவணை மூலம் வாங்கிக்கொள்ளலாம். அதாவது, ஒரு மாத தவணை ரூ.20,825-ல் இந்த ஐபோனை வாங்கலாம்.

Follow Us