ChatGPT மூலம் உங்கள் புகைப்படத்தை GIF ஆக மாற்றலாம்.. எப்படி?
Transform Images to GIFs with ChatGPT | பல சவலான வேலைகளை கூட தற்போது ஏஐ மூலம் மிக எளிதாக செய்துவிட முடிகிறது. இந்த நிலையில், சாட்ஜிபிடி மூலம் உங்களது புகைப்படத்தை GIFF ஆக மாற்றுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
இன்று உலகம முழுவதும் பரவலாக காணப்படும் முக்கிய அம்சம் தான் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence). இந்த செயற்கை நுண்ணறிவு அம்சம் துறைகளில் மட்டும் பயன்படுத்தப்படுவது இன்றி, மனிதர்களும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் அதிகம் பயன்படுத்தும் அம்சமாக மாறிவிட்டது. குறிப்பாக இந்த செயற்கை நுண்ணறிவு சாட்பாட்கள் (Artificial Intelligence Chatbot) மனிதர்களின் தனிப்பட்ட கருவிகளாகவே மாறிவிட்டன. அவற்றை பயன்படுத்தி சந்தேகங்களுக்கு தீர்வு காண்பது, கருத்துக்களை பகிர்வது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.
சாட்ஜிபிடியில் ஜிஃப்களை உருவாக்கலாம்
அந்த வகையில் தான், பலரும் தங்களது குடும்ப புகைப்படங்க, நண்பர்கள் என பிடித்த புகைப்படங்களை தங்களுக்கு பிடித்த மாதிரி எடிட் செய்துக்கொள்கின்றனர். அந்த வகையில், சாட்ஜிபிடியில் புகைப்படங்கள் மட்டுமன்றி, ஜிஃப்களை (GIF) கூட உருவாக்க முடியும். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : தீபாவளிக்கு அமேசானில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. என்ன என்ன ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி?




சாட்ஜிபிடியில் ஜிஃப்களை உருவாக்குவது எப்படி?
- சாட்ஜிபிடியில் ஜிஃப்களை உருவாக்க முதலில் சாட்ஜிபிடி (ChatGPT) செயலியை திறக்க வேண்டும்.
- அதில் நீங்கள் ஜிஃப்பாக மாற்ற நினைக்கும் உங்களது புகைப்படத்தை பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.
- நீங்கள் எதனை ஜிஃப்பாக மாற்ற விரும்புகிறீர்களோ அதன் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- பிறகு உங்களுக்கு எந்த மாதிரியான ஜிஃப் வேண்டும் என்பதை நீங்கள் சாட்ஜிபிடியில் உள்ளிட வேண்டும்.
- நீங்கள் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யாமலும் வெறும் பிராம்ப்டுகளை (Prompt) வைத்தும் கூட இந்த ஜிஃப்களை உருவாக்கலாம்.
- ஆனால், உங்களை நீங்களே ஜிஃப்பாக மாற்ற விரும்பும் பட்சத்தில், புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க : ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.3,000 வரை விலை உயர்த்தும் லாவா.. பயனர்களுக்கு ஷாக்!
நிமிடங்களில் ஜிஃப்பை உருவாக்கி தரும் சாட்ஜிபிடி
நீங்கள் உங்களது ஜிஃப் எப்படி வேண்டுமோ அதற்கு ஏற்ப கட்டளைகளை வழங்கும் பட்சத்தில் சாட்ஜிபிடி உங்களுக்கு நீங்கள் விரும்பிய படியே ஒரு ஜிஃப்பை உருவாக்கி கொடுக்கும். முன்னதாக இத்தகைய ஜிஃப்களை உருவாக்குவதற்கு சில மணி நேரங்கள் தேவைப்பட்டு இருக்கும் ஆனால், தற்போது இந்த ஏஐ சாட்பாட்கள் மூலம் அனைத்தும் மிகவும் சுலபமானதாக மாறிவிட்டது.
பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டியது அவசியம்
எனவே பொதுமக்கள் தங்களுக்கு என்னவெல்லாம் விரும்பமோ அவற்றை சாட்ஜிபிடி உள்ளிட்ட சாட்பாட்கள் மூலம் செய்துக்கொள்கின்றனர். என்னதான் இவை மிகவும் சுவாரஸ்யமானவையாக இருந்தாலும், இவற்றை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.