ஸ்பேம் கால்களால் தொல்லையா.. நிறுத்த சில வழிகள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Tips To Stop Spam Calls | பெரும்பாலான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் ஸ்பேம் கால்களால் கடும் சவால்களை எதிர்க்கொள்கின்றனர். இந்த நிலையில், ஸ்பேம் கால்களை தடுக்க உதவி செய்யும் சில முக்கிய அம்சங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொடர்ப்புக்கொள்ள மிக முக்கிய அம்சமாக உள்ளதுதான் ஸ்மார்ட்போன் (Smartphone). ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவரை ஸ்மார்ட்போன் மூலம் மிக சுலபமாக தொடர்புக்கொண்டு பேச முடியும். இவ்வாறு சிறந்த அம்சங்கள் இருந்தாலும், பெரும்பாலான பொதுமக்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் சந்திக்கும் ஒரு சிக்கல் உள்ளது. அதுதான் ஸ்பேம் கால்கள் (Spam Calls). ஒரு நாளுக்கு 5 முதல் 10 ஸ்பேம்கால்கள் வரை பொதுமக்கள் எதிர்க்கொள்கின்றனர்.
இதனால் அவர்கள் எரிச்சலுக்கு உள்ளாவதும் வழக்கமாக உள்ளது. ஆனால், ஸ்பேம் கால்கள் குறித்து இவ்வாறு எரிச்சல் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவற்றை கட்டுப்படுத்துவதற்கான வழி உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஸ்பேம் கால்களை நிறுத்தலாம் – எப்படி தெரியுமா?
உங்களுக்கு அடிக்காடி தொந்தரவு கொடுக்கும் ஸ்பேம் கால்களை நிறுத்த சில வழிகள் உள்ளன. அவை என்ன என்ன என பார்க்கலாம்.




DND சேவை
உங்களுக்கு வரும் ஸ்பேம் கால்களை நிறுத்த வேண்டும் என்றால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் DND சேவையை செயல்படுத்தலாம். இந்த ஆப்ஷனை ஆன் செய்வதன் மூலம் உங்களுக்கு வரும் விளம்பரங்கள் பல தானாகவே நின்றுவிடும்.
இதையும் படிங்க : வீட்டுக் கடன், வாகன கடன் EMI செலுத்துபவர்களுக்கு சிக்கல்.. ஆர்பிஐ எடுக்கப்போகும் முக்கிய முடிவு!
செயலிகளை பயன்படுத்தலாம்
ஸ்பேம் கால்களை கண்டறிய உதவும் செயலிகள் பல உள்ளன. அவற்றை பயன்படுத்துவதன் மூலம் மோசடி அழைப்புகள் முன்கூட்டியே உங்களுக்கு தெரிந்துவிடும். இதனால், நீங்கள் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
பிளாக் செய்துவிடுங்கள்
உங்களுக்கு அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை பிளாக் செய்வது நல்லது. இதன் மூலம் அந்த எண்களில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வருவதை உங்களால் தவிர்க்க முடியும்.
இதையும் படிங்க : தீபாவளி ஆஃபர்ஸ்.. நெக்ஸான் முதல் கைலாக் வரை.. இந்த 5 எஸ்யூவி கார்களுக்கு என்ன தள்ளுபடி!
எண்களை பகிர்வதை தவிருங்கள்
பலரும் வணிக வாகனங்களில் தங்களது மொபைல் எண்களை வழங்குகின்றனர். அவ்வாறு கொடுப்பதன் மூலம் தொடர் ஸ்பேம் அழைப்புகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே அதனை தவிர்ப்பது நல்லது.