ஜனவரி முதல் வாட்ஸ்அப், டெலிகிராம் பயன்படுத்துவதில் சிக்கல்.. ஆக்டிவ் சிம் கார்டை கட்டாயமாக்கிய அரசு!
India’s New SIM Card Rule by Jan 2027 | இந்தியர்கள் வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட மெசேஜிங் செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அது குறித்து முக்கிய தகவல் ஒன்று ஜனவரி முதல் அமலுக்கு வர உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிக செயலிகளை பயன்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக டெலிகிராம் (Telegram), வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துகின்றனர். பலரும் தங்களது ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களில் இந்த செயலிகளை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் பயன்படுத்தும் பயனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அரசின் முக்கிய உத்தரவு அமைந்துள்ளது. இந்த உத்தரவு, ஜனவரி 01, 2027 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள அந்த முக்கிய உத்தரவு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆக்டிவ் சிம் கார்டு – டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு
தொலைத்தொடர்புத்துறை வெளியிட்டுள்ள விதிகளின்படி, மெசேஜிங் தளங்கள் பயனர்களின் கணக்குகள் ஆக்டிவாக உள்ள சிம் கார்டுகள் உடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது. இதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31, 2026 வரை நீட்டித்துள்ளது. இதன் மூலம் புதிய விதிகள் ஜனவரி 01, 2027 முதல் அமலுக்கு வர உள்ளது. அவ்வாறு அந்த புதிய விதி அமலுக்கு வரும் பட்சத்தில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் இணைக்கப்படாத கணக்குகள் செயலிழக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதையும் படிங்க : பிளிப்கார்ட் சேல்.. வெறும் ரூ.55,000-க்கே ஐபோன் 17 வாங்கலாம்.. எப்படி?




சிம் கார்டு இணைக்க வேண்டும் என கூறும் அரசு – காரணம் என்ன?
தற்போது வாட்ஸ்அப் உள்ளிட்ட மெசேஜிங் தளங்கள், பயனர்கள் தங்களது கணக்கை லாக் இன் செய்யும்போது சிம் கார்டு கேட்கின்றன. அதன் பிறகு மொபைல் போனில் இருந்து சிம் கார்டு நீக்கம் செய்யப்பட்டாலும், செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இதேபோல Linked Devices அம்சம் மூலம் லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றில் இருந்து கூட செயலிகளை பயன்படுத்த முடியும்.
இதையும் படிங்க : ஐபோன் டுயோவுக்கு ரூ.81,500 வரை தள்ளுபடி.. Note செய்ய வேண்டிய சில விஷயங்களும் உள்ளன!
இந்த நிலையில் தான், செயலிகளில் மோசடி மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதன் காரணமாக அரசு இந்த முக்கிய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.