வழிக்கு வந்த டெலிகாம் நிறுவனங்கள்.. டேட்டா இல்லாத 3 ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த ஏர்டெல்!
Airtel Launches New Recharge Plans | பட்டன் போன் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு ஏற்ற, ரீச்சார்ஜ் திட்டங்கள் இல்லை என எழுந்த புகாரின் பேரில் TRAI புதிய விதிகளை அறிமுகம் செய்த நிலையில், தற்போது ஏர்டெல் டேட்டா இல்லாத மூன்பு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் ஏராளனான பொதுமக்கள் பயன்படுத்தும் மிகமுக்கிய தொலைத்தொடர்பு (Telecommunication) நிறுவனங்களாக ஜொயோ, ஏர்டெல், வி ஆகியவை உள்ளன. இந்த நிறுவனங்கள் தொடர்ச்சியாக தங்களின் ரீச்சார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தியது மட்டுமன்றி, டேட்டா இல்லாத ரீச்சார்ஜ் திட்டங்களை முழுமையாக நீக்கின. இதன் காரணமாக பேசிக் மொபைல் போன்களை பயன்படுத்தும் நபர்களும் கூட, ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் நபர்கள் ரீச்சார்ஜ் செய்யும் திட்டங்களை கூடுதல் தொகை செலுத்தி ரீச்சார்ஜ் செய்ய வேண்டிய நிலை இருந்தது.
இந்த நிலையில் தான், TRAI (Telecom Regulatory Authority Of India)-ன் புதிய விதிகளின்படி, தற்போது டேட்டா இல்லாத ரீச்சார்ஜ் திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
TRAI வெளியிட்ட புதிய விதிமுறைகள்
என்னதான் பெரும்பாலான பொதுமக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினாலும், இன்றளவும் கூட சில பொதுமக்கள் பட்டன் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் அவர்கள் டேட்டா அல்லாத திட்டங்கள் நீக்கம் செய்யப்பட்டதன் காரணமாக கூடுதல் கட்டணம் செலுத்தி ரீச்சார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இது குறித்து கவனம் செலுத்திய TRAI, செப்டம்பர் மாதம் டெலிகாம் கன்ஸ்யூமர்ஸ் ப்ரொடெக்ஷன் (Telecom Consumers Protection) ஒழுங்குமுறைகள் 2026 என்ற புதிய விதியை வெளியிட்டது.




இதையும் படிங்க : குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தியதா OpenAI?
புதிய ரீச்சார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல்
இந்த புதிய விதிகளின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டேட்டா அல்லாத வாய்ஸ் மற்றும் குறுஞ்செய்தி அம்சங்களை கொண்ட ரீச்சார்ஜ் திட்டங்களை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும் என கூறியிருந்தது. அதற்கு அக்டோபர் 21, 2026 வரை கால அவகாசமும் வழங்கியிருந்தது. இந்த நிலையில் தான், தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது புதிய டேட்டா அல்லாத ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
இதையும் படிங்க : இனி போன் கால்களுக்கு பெயர் கட்டாயம் – தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
ரூ.185, ரூ.203 மற்றும் ரூ.206 என்ற மூன்று திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களில் மொபைல் டேட்டா அம்சம் எதுவும் வழங்கப்படவில்லை. லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் ஆகியவற்றுக்கான அன்லிமிடெட் வாய்ஸ் கால் அம்சம் வழங்கப்படுகிறது. ஒரு திட்டத்திற்கு 100 குறுஞ்செய்திகள் அம்சம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.