AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காணாமல் போன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கண்டுபிடிப்பது எப்படி?.. Google Find My Hub இருந்தால் போதும்!

How To Find Lost Android Smartphone | தொலைந்துப்போன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை Google Find Hub மூலம் மிக எளிதில் கண்டுபிடிக்கலாம். ஆனால், அதில் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய சில செட்டிங்ஸ் உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

காணாமல் போன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கண்டுபிடிப்பது எப்படி?.. Google Find My Hub இருந்தால் போதும்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Oct 2026 00:09 AM IST

மனிதர்களின் வாழ்வில் மிக முக்கிய அங்கமாக ஸ்மார்ட்போன் (Smartphone) மாறிவிட்டது. இதன் காரணமாக கல்லூரி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை என அனைவரது கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. ஸ்மார்ட்போன் இல்லாமல் இயங்க முடியாத சூழல் உள்ள நிலையில்,  எங்கு சென்றாலும் கையுடன் ஸ்மார்ட்போனை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அவ்வாறு பல இடங்களுக்கு ஸ்மார்ட்போனை எடுத்துச் செல்லும்போது அது தொலைந்துப்போகும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், கூகுள் ஃபைண்ட் ஹப் (Google Find My Hub) மூலம் உங்களது தொலைந்துப்போன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை (Android Smartphone) மீட்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

காணாமல் போன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கண்டுபிடிப்பது எப்படி?

கூகுள் கணக்கில் நீங்கள் Sign In செய்தால் தானாகவே Find Hub அம்சம் இயங்க தொடங்கிவிடும். ஆனால், அதில் மேற்கொள்ளும் சில முக்கிய செட்டிங்ஸ், பிற்காலத்தில் உங்களது ஸ்மார்ட்போன் தொலைந்துப்போனால் அதனை விரைவாக கண்டுபிடிக்க பயனுள்ளதாக இருக்கும். இந்த நிலையில், எந்த எந்த செட்டிங்ஸை கட்டாயம் செய்திருக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : அமேசான் சேல் – ரூ.20,000க்குள் 6 சிறந்த ஸ்மார்ட்போன்கள் – உங்க சாய்ஸ் எது?

Find My Hub : கட்டாயம் மேற்கொள்ளா வேண்டிய செட்டிங்ஸ்

  1. லொகேஷன் (Location) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) On ஆக இருக்க வேண்டும்.
  2. Allow device to be located என்ற அம்சம் On ஆக இருக்க வேண்டும். இந்த அம்சத்தை Find Hub செட்டிங்ஸ் அம்சத்தில் உள்ள செக்யூரிட்டி ஆப்ஷனின் கீழ் காண முடியும்.
  3. உங்கள் ஸ்மார்ட்போன் ஆப்லைனில் இருந்தாலும் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் With network in busy places only அல்லது With network ஆகிய அம்சங்களை பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க : மீண்டும் அறிமுகமாகும் ஆர்குட் செயலி.. நிறுவனர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த செட்டிங்ஸ் அனைத்தும் On-ல் இருக்கும் பட்சத்தில் உங்களது தொலைந்துப்போன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை மிக எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us