WhatsApp : வாட்ஸ்அப்பில் அவதார் உருவாக்குவது எப்படி?.. Step By Step Guide இதோ!
How to Create WhatsApp Avatar | உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் மிக முக்கிய செயலியாக மெட்டாவின் வாட்ஸ்அப் உள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப் செயலியில் அவதாரை உருவாக்குவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக அளவில் ஏராளமான மக்களால் பயன்படுத்தப்படும் முக்கிய செயலிகளில் ஒன்றாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. இந்த செயலியை பலரும் தகவல் பரிமாற்றம், பொழுபோக்கு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வாட்ஸ்அப் குழு உரையாடல்கள் பலருக்கும் பிடித்தமானதாக உள்ளது. நண்பர்கள் மற்றும் குடும்பத்துடம் ஒரே சாட்டில் உரையாடும் மகிழ்ச்சியை இது வழங்குகிறது. இத்தகைய பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த செயலியில் வதார் உருவாக்குவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸ்அப்பில் அவதார் உருவாக்குவது எப்படி?
- அதற்கு முதலில் வாட்ஸ்அப் செயலிக்கு செல்ல வேண்டும்.
- அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து Menu-க்கு செல்ல வேண்டும்.
- அந்த மெனுவில் Settings ஆப்ஷனை கிளிக் செய்து Avatar என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் கொடுக்கப்பட்டுள்ள Create Your Avatar ஆப்ஷனை கிளிக் செய்து Get Started என்ற அம்சத்தை தேர்வு செய்யுங்கள்.
- அதன் பிறகு Create Manually என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, தோல் நிறம், தலைமுடி, முக தோற்றம், உடல் அமைப்பு ஆகியவற்றை செட் செய்து சேவ் செய்ய வேண்டும்.
- உங்களது தோற்றத்துக்கு ஏற்ப அவதாரை நீங்கள் வடிவமைத்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : ChatGPT-ல் Intelligent UI உடன் GPT-6 அறிமுகம் செய்த ஓபன் ஏஐ.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
புகைப்படம் வைத்து அவதார் உருவாக்குவது எப்படி?
- முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளைம் கிளிக் செய்து Menu ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- அதில் Settings அம்சத்தை தேர்வு செய்து, Avatar அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- Create Your Avatar என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, Get Started என்ற அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு Create From Selfie என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- அதன் பிறகு செல்ஃபி புகைப்படம் எடுத்து அதன் மூலம் உங்களுக்கு பிடித்தபடி உங்களது அவதாரை சுலபமாக உருவாக்கிக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்.. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!




மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த இரண்டு முறைகளை பின்பற்றி மிக சுலபமாக உங்களது அவதார்களை உருவாக்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.