AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜிமெயில் போல இனி வாட்ஸ்அப்பிலும் ஸ்கெடியூல் செய்யலாம்.. விரைவில் வரும் அசத்தல் அம்சம்!

Meta's New Feature to Boost Productivity | மெட்டா, வாட்ஸ்அப்பில் பல்வேறு அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஜிமெயிலில் உள்ளதை போல ஒரு அட்டகாசமான அம்சத்தை தற்போது வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்ய உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜிமெயில் போல இனி வாட்ஸ்அப்பிலும் ஸ்கெடியூல் செய்யலாம்.. விரைவில் வரும் அசத்தல் அம்சம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Nov 2026 10:54 AM IST

பயனர்களின் வசதிக்காகவும், அனுபவத்தை மேம்படுத்தும் வகையிலும் மெட்டா (Meta), வாட்ஸ்அப்பில் (WhatsApp) பல்வேறு அட்டாகசமான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான், தற்போது குறுஞ்செய்தி அனுப்புவது தொடர்பாக முக்கிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, ஜிமெயிலில் (Gmail) இருப்பதை போலவே, குறுஞ்செய்திகளை ஸ்கெடியூல் (Message Schedule) செய்யும் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், மெட்டாவின் இந்த அசத்தல் அம்சம் குறித்தும் அதன் சிறப்புகள் என்ன என்ன என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

இனி வாட்ஸ்அப்பிலும் குறுஞ்செய்திகளை ஸ்கெடியூல் செய்யலாம்

மெட்டா, அவ்வப்போது வாட்ஸ்அப்பில் பல அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், தற்போது ஜிமெயிலில் இருப்பதை போன்ற அட்டகாசமான அம்சத்தை அறிமுகம் செய்வதற்காக வேலையில் உள்ளது. அதாவது, ஜிமெயிலில் நாம் ஒருவருக்கு முன்கூட்டியே ஒரு செய்தியை ஸ்கெடியூல் செய்ய முடியும். அதாவது நாளை காலை ஒரு நிகழ்வு உள்ளது என்றால் அதனை இன்று மாலை 7 மணிக்கு நினைவூட்ட கூறினால், மாலை 3 மணிக்கே அந்த செய்தியை டைப் செய்து அவருக்கு சரியாக 7 மணிக்கு சென்று சேரும் வகையில் ஸ்கெடியூல் செய்ய முடியும். இந்த அம்சம் தான், தற்போது வாட்ஸ்அப்பிலும் வர உள்ளது.

இதையும் படிங்க : உங்கள் மொபைல் ஹேக் ஆகிவிட்டதா?.. உடனே இவற்றை செய்யுங்கள்!

தேதி மற்றும் நேரத்தை ஸ்கெடியூல் செய்துவிட்டால் போதும்

இந்த அம்சம் அமலுக்கு வரும் பட்சத்தில் பயனர்கள் தாங்கள் யாருக்கு குறுஞ்செய்தி அனுப்ப விரும்புகிறார்களோ, அவர்களுக்கு குறுஞ்செய்திகளை டைப் செய்து உரிய தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்து ஸ்கெடியூல் செய்தால் போதும். அது சரியாக அந்த நேரத்திற்கு அந்த நபரை சென்று சேர்ந்துவிடும். இந்த அம்சத்தை மெட்டா தனிநபர் சாட் (Personal Chat) மற்றும் குழு சாட் (Group Chat) ஆகிய இரண்டிலும் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் உரையாடல்கள் மேலும் சுலபமானதாக மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : வரும் வாரங்களில் அறிமுகமாக வரிசை கட்டி நிற்கும் ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!

யாருக்கெல்லாம் பயனுள்ளதாக இருக்கும்?

வாட்ஸ்அப்பில் வர உள்ள இந்த அம்சம் முக்கிய தேதிகளை அடிக்கடி மறப்பவர்கள், வெவ்வேறு நேர மண்டலங்களில் வசிக்கும் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர்களை தொடர்புக்கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அம்சம் விரைவில் வாட்ஸ்அப்பில் அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us