புத்தாண்டை முன்னிட்டு புதிய ரீச்சார்ஜ் திட்டங்களை அறிவித்த ஜியோ!
Jio New Year Recharge Plans | ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அட்டகாசமான சலுகைகள் மற்றும் திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், புத்தாண்டை முன்னிட்டு அசத்தலான புதிய ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது.
தீபாவளிக்கு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்த நிலையில், தற்போது புத்தாண்டு சிறப்பு சலுகளைகளை நிறுவனங்கள் அறிவிக்க தொடங்கியுள்ளன. அந்த வகையில், ஜியோ (Jio) நிறுவனம் தனது புத்தாண்டு சேலை அறிவித்துள்ளது. அதில் சில புதிய ரீச்சார்ஜ் திட்டங்களை (New Recharge Schemes) அறிவித்துள்ளது. Happy New Year 2.0 திட்டத்தின் கீழ் இந்த புதிய ரீச்சாஜ் திட்டத்தை ஜியோ அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஜியோ அறிவித்துள்ள இந்த புதிய ரீச்சார்ஜ் திட்டங்கள் மற்றும் அவற்றின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
புதிய ரீச்சார்ஜ் திட்டங்களை அறிவித்த ஜியோ
புத்தாண்டை முன்னிட்டு ஜியோ நிறுவனம் தனது புதிய ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் இரண்டு அன்லிமிடெட் டேட்டா திட்டங்கள் மற்றும் ஒரு குறுகிய கால 5ஜி டேட்டா ஆட் ஆண் திட்டம் ஆகும். ஜியோ நிறுவனம் ரூ.399-க்கு ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்கள் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் நிலையில் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா சேவையை வழங்குகின்றன.
இதையும் படிங்க : ஏஐ பயன்படுத்தவில்லை என்றால் வேலையை விட்டு செல்லுங்கள்.. ஊழியர்களை எச்சரித்த பிரபல நிறுவனம்!




ரூ.399-க்கான ரீச்சார்ஜ் திட்டம்
ரூ.399-க்கு ரீச்சார்ஜ் செய்யும் பயனர்கள் கூடுதலாக எந்தவித கட்டணமும் செலுத்தாமல் ஏராளமான டிஜிட்டல் தளங்களின் சேவைகளை பெற முடியும். உதாரணமாக 12 மாதங்களுக்கான கேன்வா ப்ரோ சந்தா, ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல், ஜியோ டிவி ஆகிய அம்சங்கள் கிடைக்க உள்ளன. அதுமட்டுமன்றி, ஜியோம் கேம்கள், 50 ஜிபிகளுக்கான கிளவுட் ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்கள் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்க உள்ளது.
இதையும் படிங்க : இரவு முழுவதும் சார்ஜ் செய்தால் போன் பேட்டரி வீணாகுமா?.. நிபுணர்கள் கூறுவது என்ன?
ஆண்டுக்கான ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ
அதிக கால அளவை கொண்ட ரீச்சார்ஜ் திட்டத்தில் ரீச்சார்ஜ் செய்ய விரும்பும் நபர்களுக்காக ஜியோ நிறுவனம், ஆண்டுக்கான புதிய ரீச்சார்ஜ் திட்டத்தை ரூ.3,999-க்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா சேவையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கால அளவு 365 நாட்களாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரி இலவச 100 குறுஞ்செய்தி சேவையை பெற முடியும்.
இந்த திட்டத்திற்கு 12 மாத கேன்வா ப்ரோ லைட் சந்தா, ஜியோ ஜாட்ஸ்டார் மொபைல், 50 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல அட்டகாசமான அம்சங்கள் கிடைக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.