AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஏஐ பயன்படுத்தவில்லை என்றால் வேலையை விட்டு செல்லுங்கள்.. ஊழியர்களை எச்சரித்த பிரபல நிறுவனம்!

CEO Warns Employees to Adapt or Face Layoffs | உலகத்தையே ஆட்டிப்படைக்கும் முக்கிய அம்சமாக செயற்கை நுண்ணறிவு உள்ளது. இந்த நிலையில், பிரபல நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, தங்களது ஊழியர்கள் ஏஐ பயன்படுத்தாமல் இருந்தால் வேலையை விட்டு செல்ல நேரிடும் என கூறியுள்ளது.

ஏஐ பயன்படுத்தவில்லை என்றால் வேலையை விட்டு செல்லுங்கள்.. ஊழியர்களை எச்சரித்த பிரபல நிறுவனம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 21 Nov 2026 22:37 PM IST

உலகத்தை ஆட்டிப்படைக்கும் மிக முக்கிய அம்சமாக செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) உள்ளது. செயற்கை நுண்ணறிவு அம்சம் பல்வேறு வியக்கத்தக்க மாற்றங்களை செய்து வருகிறது. ஆனால், மறுபுறம் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் மூலம் ஏராளமானவர்கள் தங்களது வேலையை இழந்து வருகின்றனர். பல நிறுவனங்கள் ஊழியர்களை வேலையை விட்டு செல்ல கூறும் நிலையில், சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை செயற்கை நுண்ணறிவும் அம்சத்தை பயன்படுத்தக்கூறி அறிவுறுத்துகின்றனர். இந்த நிலையில், பிரபல நிறுவனம் ஒன்று செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்த வேண்டும் என்றும், இல்லை என்றால் வேலையை விட்டு செல்ல கூறியுள்ளது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிகான் லேப்ஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரி எச்சரிக்கை

பாலிகான் லேப்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் போய்ரான், செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்தி தங்களது வேலைகளை தாங்களே ஆட்டோமேட் செய்ய வேண்டும் என்று, ஏஐ செய்யக்கூடிய வேலைகளை ஒப்படைக்க மறுப்பவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடை எக்ஸ் பக்கத்தில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : ரூட்டு இனி ஈசி.. ஆப்பிள் மேப்ஸ் கொண்டு வந்த சூப்பர் அப்டேட்ஸ்.. என்னென்ன ஆப்ஷன்ஸ் இருக்கு?

ஏஐ மூலம் வேலையை இழக்கும் லட்சக்கணக்கான ஊழியர்கள்

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு அம்சம் மிகவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முன்னதாக மனிதர்கள் பல மணி நேரம் செலவு செய்து செய்த வேலைகளை, தற்போது செயற்கை நுண்ணறிவு அம்சம் மிக விரைவாகவும், எளிதாகவும் செய்து முடித்துவிடுகிறது. இதன் காரணமாக நிறுவனங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கிவிட்டு, செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பணியில் அமர்த்துகின்றன. இதன் காரணமாக உலக முழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்கள் தங்களது பணிகளை இழந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : இன்ஸ்டாகிராமில் அதிரடி மாற்றம்.. இனி இதுபோன்ற வீடியோக்கள் அதிகம் வராது.. மெட்டா எடுத்த முக்கிய முடிவு!

ஏஐ அதிக்கம் : கேள்வி எழுப்பும் ஊழியர்கள்

ஏற்கனவே உலகின் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இந்த நிலையில், பாலிகான் லேப்ஸ் தனது ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள எச்சரிக்கை ஊழியர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்தையும் ஏஐ மயமாக்கிவிட்டால் மனிதர்கள் தங்களது வாழ்வாதாரத்தை எப்படி ஈடு செய்வார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow Us