பெண்கள் பாதுகாப்பில் வாய்கிழிய வசனம் பேசிய விஜய்! தரங்கெட்ட தவெக ஆட்சியில் மோசமான நிலையில் தமிழகம்.. தூத்துக்குடி சம்பவத்தில் கனிமொழி விளாசல்!
Kanimozhi MP Condemns TVK Govt : பெண்கள் பாதுகாப்பு குறித்து வாய்கிழிய வசனம் பேசிய முதல்வர் விஜய் தலைமையிலான தரங்கெட்ட தவெக ஆட்சியில் தமிழகம் படுமோசமான சூழலுக்கு சென்றுள்ளதாக கனிமொழி ராஜாத்தி கருணாநிதி எம்பி கடுமையாக விமர்சித்து உள்ளார் .
தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து வாய் கிழிய வசனம் பேசிய முதல்வர் விஜயின் தரங்கெட்ட தவெக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கில் தமிழ்நாடு மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி ராஜாஜி கருணாநிதி எம்பி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், வேதமாணிக்கபுரத்தில் 11- வகுப்பு படித்து வந்த மாணவியை வீடு புகுந்து கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எங்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இத்தகைய மோசமான சூழ்நிலைக்கு தமிழகத்தை தரங்கெட்ட தமிழக வெற்றிக் கழக அரசு தள்ளி உள்ளது.
பெண்கள் பாதுகாப்பு குறித்து வாய்கிழிய பேசிய விஜய்
வீடுகளில் இருக்கும் பெண்களை அத்துமீறி நுழைந்து தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தமிழகத்தில் அன்றாடம் நிகழும் செய்தியாக உள்ளது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை எங்கே போய் தூங்கிக் கொண்டிருக்கிறது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து வாய்கிழிய வசனம் பேசிய முதல் அமைச்சர் ஜோசப் விஜய்க்கு இந்த சம்பவங்கள் கொஞ்சம் கூட மனதை உறுத்தவில்லையா என்று அந்தப் பதிவில் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் படிக்க: நா பெரிய ரவுடி ஆகனும்.. அதுக்கு இதுதான் சரியான சான்ஸ்.. இளைஞரை சுற்றி வளைத்து தூக்கிய சென்னை போலீஸ்!
தூத்துக்குடி பள்ளி மாணவி கொலை சம்பவத்தின் பின்னணி
தூத்துக்குடி மாவட்டத்தில், சாயர்புரம் அருகே உள்ள சோலை புதூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்தக் கொலையில் ஈடுபட்டது அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் உறவினரான காசி பாண்டியன் என்பவரின் மகன் முத்துராஜ் ஆவார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், மாணவி வேறு ஒரு நபரிடம் செல்போனில் பேசி வந்ததை முத்துராஜ் கண்டித்த நிலையில், அதை அவர் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதில், ஆத்திரம் அடைந்த முத்துராஜ் மாணவியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை கத்தியால் குத்தியும், துப்பட்டாவாலி கழுத்தை நெரித்தும் கொலை செய்தார்.
அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்
அத்துடன், கத்தியால் தனது உடலிலும் குத்திக்கொண்டு, விஷத்தை அருந்தி முத்துராஜ் தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தான், தற்போது கனிமொழி தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: காதலி மீது ஏற்பட்ட சந்தேகம்! வீடு புகுந்து கத்தியால் குத்தி கொன்ற காதலன்.. தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்!