AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரீல்ஸ் மோகத்துக்கு ஒர் அளவே இல்லையா? 80 அடி கிணற்றில் 2 மணி நேரமாக சிக்கி தவித்த இளைஞர்.. கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த பரபர சம்பவம்!

Kallakurichi Man Trapped In Well : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரீல்ஸ் பதிவு செய்யும் மோகத்தில் 80 அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் இளைஞர் ஒருவர் சிக்கி கொண்டார். அவரை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கயிறு மூலம் மீட்டனர்.

ரீல்ஸ் மோகத்துக்கு ஒர் அளவே இல்லையா? 80 அடி கிணற்றில் 2 மணி நேரமாக சிக்கி தவித்த இளைஞர்.. கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த பரபர சம்பவம்!
தீயணைப்பு படையினர்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 21 Nov 2026 19:44 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிலீஸ் பதிவு செய்யும் மோகத்தில் இளைஞர் கிணற்றுக்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை, தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் பத்திரமாக கயிறு கட்டி மீட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மூலசமுத்திரம் கிராமத்தில் வசித்து வருபவர் பரத் ( 19 வயது), விக்னேஷ் ( 18 வயது). நண்பர்களான இருவரும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருந்து வந்தனர். இந்த ஆர்வம் தான் தற்போது பெரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் நிலைக்கு சென்றுள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம். இதில், பரத் மற்றும் விக்னேஷ் அதே ஊரில் உள்ள செல்லப்பா என்பவரின் விவசாய கிணற்றுக்கு ரீல்ஸ் எடுப்பதற்காக சென்றுள்ளனர்.

80 அடி ஆழம் உள்ள கிணற்றில் ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர்கள்

அங்கு, சுமார் 80 அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றின் மேலே நின்றுகொண்டு ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அவர்கள் வைத்திருந்த செல்போன் தவறி கிணற்றுக்குள் விழுந்தது. இதனால், பதறிப்போன அவர்கள் கிணற்றில் உள்ள பைப் வழியாக இருவரும் உள்ளே இறங்கினர். உடனே, செல்போனை எடுத்துக் கொண்டு பைப் மூலமாக மேலே ஏறி வந்து கொண்டிருந்தனர். அப்போது, பரத் என்ற இளைஞர் பைப் வழியாக ஏற முயன்ற போது வழுக்கி மீண்டும் கிணற்றின் உள்ளேயே விழுந்தார். ஆனால், விக்னேஷ் பைப் வழியாக ஏறி கிணற்றின் மேல் பகுதிக்கு சென்று விட்டார்.

மேலும் படிக்க: நேருக்கு நேர் வந்த 2 இரு சக்கர வாகனங்கள்.. ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து.. திருப்பூரில் அடுத்தடுத்து பலியான இருவர்!

கிணற்றில் 2 மணி நேரமாக தவித்த இளைஞர்

முன்னதாக, பரத்தை மீட்பதற்கு உள்ளே இருந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பலன் அளிக்கவில்லை. கிணற்றின் மேல் பகுதிக்கு சென்ற பின்னரும் பரத்தை மீட்பதற்கு முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை, இதன் காரணமாக, சுமார் 2 மணி நேரம் கிணற்றுக்குள்ளேயே பரத் சிக்கி கொண்டு தவித்தார். இதனால், தான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலன் அளிக்காத நிலையில், இது தொடர்பாக அருகில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கு விக்னேஷ் தகவல் தெரிவித்தார்.

கிணற்றிலிருந்து இளைஞரை மீட்ட தீயணைப்பு படையினர்

அதன் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சுமார் 80 அடி ஆழம் கொண்ட கிணற்றில் கயிறு மூலம் இறங்கி பரத்தை பாதுகாப்பாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். ரீல்ஸ் பதிவிடும் மோகத்தில், இளைஞர் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் சிக்கிக்கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: காதலி மீது ஏற்பட்ட சந்தேகம்! வீடு புகுந்து கத்தியால் குத்தி கொன்ற காதலன்.. தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்!

Follow Us