AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அனிருத் – காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி! சென்னைக்கு வந்த தெலங்கானா, கேரள முதல்வர்கள்

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவியா மாறனின்  திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் கேரள முதல்வர் வி.டி.சதீசன் ஆகியோர் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். 

அனிருத் – காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி! சென்னைக்கு வந்த தெலங்கானா, கேரள முதல்வர்கள்
சென்னைக்கு வந்த தெலங்கானா, கேரள முதல்வர்கள்
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Nov 2026 18:59 PM IST

சென்னை, நவம்பர் 21 : இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவியா மாறனின்  திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் கேரள முதல்வர் வி.டி.சதீசன் ஆகியோர் சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.  அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21, 2026 இன்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு திரையுலக அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். குறிப்பாக காவ்யா மாறனின் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் இதில் கலந்து கொள்கின்றனர்.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், முன்னாள் திமுக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு,சிபிஐ முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன்! நடிகை ராதிகா உள்ளிட்டோரும் விழா அரங்குக்கு வருகை தரும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

மேலும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, நடிகர்கள் கார்த்தி, நடிகர் சித்தார்த், அதிதி ராவ், இயக்குநர் அட்லி உள்ளிட்டோரும் அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கநல்துகொள்ள சென்னை வந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் பிரபலங்கள் வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Follow Us