
Kanimozhi
திராவிட முன்னேற்ற கழகத்தில் முக்கிய தலைவர்களில் ஒருராக இருப்பவர் கனிமொழி. டெல்லி தேசிய அரசியலில் திமுவின் முக்கிய முகமாய் கனிமொழி பார்க்கப்படுகிறார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் ஆவார். சிறுவயதில் இருந்தே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தை கருணாநிதியை போல எழுதுவதிலும், வாசிப்பிலும் ஆர்வம் கொண்ட இவர், பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி இருக்கிறார். தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பு, ஆங்கில நாளேட்டிலும், சிங்கப்பூரில் தமிழ் முரசு இதழிலும் பணியாற்றி உள்ளார். 2007ஆம் ஆண்டு முதன்முறையாக மாநிலங்களை உறுப்பினராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் 2013ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முதன்முறையாக 2019ஆம் ஆண்டு மக்களை சந்தித்து தேர்தலில் நின்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மக்களவைக்கு சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு தேர்தலிலும் தூத்துக்குடி தொகுதியில் நின்று, மீண்டும் மக்களவை உறுப்பினரானார். தனது முற்போக்குவாதத்தையும் பெண்ணிய வாதத்தையும் முன்வைத்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்