AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : ஞாயிற்று கிழமையிலும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. ஈரான் தாக்குதல் எதிரொலி!

Gold and Silver Price Increased On Sunday | ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக தாக்குதல் நடத்தியுள்ளதன் காரணமாக ஞாயிற்று கிழமையான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : ஞாயிற்று கிழமையிலும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. ஈரான் தாக்குதல் எதிரொலி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Mar 2026 22:48 PM IST

சென்னை, மார்ச் 01 : ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஞாயிற்று கிழமையான இன்று (மார்ச் 01, 2026) தங்கம் (Gold) மற்றும் வெள்ளி (Silver) விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 மற்றும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஞாயிற்று கிழமையிலும் அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை

அணு ஆயுதம் தயாரிக்க கூடாது என அமெரிக்கா ஈரானை தொடர்ந்து எச்சரித்து வந்தது. இந்த விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை வெற்றி பெறாத நிலையில், இஸ்ரேல் உடன் இணைந்து அமெரிக்கா நேற்று (பிப்ரவரி 28, 2026) ஈரானை தாக்கியது. ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் குண்டு மழைக்கு இறையாகியுள்ளன.

இதையும் படிங்க : வீட்டில் இருந்தே வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

அதுமட்டுமன்றி, ஈரானின் உட்சபட்ச தலைவர் அலி காமனெயி கொல்லப்பட்டுள்ளார். இது உலக அளவில் புவிசார் பதற்றத்தை கடுமையாக அதிகரித்துள்ளது. வழக்கமாக புவிசார் பதற்றங்களின் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரிக்கும் பட்சத்தில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

ஞாயிற்று கிழமையான இன்று சென்னையில் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.225 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,775-க்கும், சவரனுக்கு ரூ.1,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,26,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.325-க்கும், ஒரு கிலோ ரூ.3,25,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us