AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாதம் வெறும் ரூ.1,000 முதலீடு செய்து ஓய்வு காலத்தில் மாதம் ரூ.20,000 பெறாலாம்.. எப்படி?

Get 20,000 Rupees As Pension By Investing 1,000 Rupees | ஓய்வு காலத்தில் குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியமாக பெற SIP மற்றும் SWP திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த நிலையில், வெறும் ரூ.1,000 முதலீடு செய்து ரூ.20,000 பெறுவது எப்படி என பார்க்கலாம்.

மாதம் வெறும் ரூ.1,000 முதலீடு செய்து ஓய்வு காலத்தில் மாதம் ரூ.20,000 பெறாலாம்.. எப்படி?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 27 Feb 2026 17:03 PM IST

மனிதன் பிறப்பது முதல் இறப்பது வரை அனைத்து கட்டங்களிலும் கட்டாய தேவைகளில் ஒன்றாக உள்ளது பணம். அத்தியாவசிய தேவைகள் முதல் ஆடம்பரம் வரை எப்படிப்பட்ட வாழ்க்கை முறையை வாழ வேண்டும் என்றாலும் அதற்கு பணம் அடிப்படையான ஒன்றாக உள்ளது. இந்த சூழலில் ஒவ்வொரு தனி மனிதரும் தங்களுக்கான நிதி பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. காரணம், வேலைக்கு செல்லும்போது நிதி சிக்கல்கள் ஏற்படவில்லை என்றாலும், ஓய்வு பெற்ற பின் மிக கடுமையான நிதி சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், மாதம் ரூ.1,000 முதலீடு செய்வதன் மூலம் மாதம் ரூ.20,000 வரை ஓய்வூதியம் பெறும் எஸ்ஐபி (SIP – Systematic Investment Fund) திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதம் ரூ.1,000 உடன் எஸ்ஐபி தொடங்குங்கள்

மாதம் ரூ.1,000 முதலீடு செய்வது பெரிய சுமையாக இருக்காது. அவ்வாறு நீங்கள் 25 வயது முதல் ரூ.1,000 முதலீடு செய்ய தொடங்கும் பட்சத்தில் 50 வயதுக்கு மேல் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை வருமானமாக பெற முடியும். அதற்கு முதலில் 15 சதவீதம் லாபம் கொடுக்க கூடிய எஸ்ஐபியில் மாதம் ரூ.1,000 முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 முதலீடு செய்யும் பட்சத்தில் மொத்தமாக ரூ.3 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். ஆனால் அதற்கான வருமானம் ரூ.24.56 லட்சமாக இருக்கும். அதன்படி 50 வயதில் உங்கள் மொத்த கார்பஸ் ரூ.27.56 லட்சமாக இருக்கும்.

இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் விலை முதல் இபிஎஃப்ஓ வரை.. மார்ச் மாதத்தில் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

SWP செய்ய வேண்டியது அவசியம்

இப்போது நீங்கள் எஸ்ஐபியில் முதலீடு செய்து பெற்ற தொகையை அப்படியே SWP செய்ய வேண்டும். அதாவது ஆண்டுக்கு 7.5 சதவீதம் வருமானம் தரக்கூடிய திட்டத்தில் அந்த மொத்த தொகை ரூ.27.56 லட்சத்தை முதலீடு செய்கிறீர்கள் என்றால் மாதம் மாதம் ரூ.20,000 கிடைக்கும். இதன் மொத்த கால அளவீடு 25 ஆண்டுகளாக உள்ள நிலையில், திரும்ப பெற்ற தொகை ரூ.60 லட்சமாக இருக்கும்.

இதையும் படிங்க : நிதி மேலாண்மைக்கு நடுத்தர வர்கத்தினர் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்!

மாதம் மாதம் நீங்கள் இதில் இருந்து ரூ.20,000 பணம் பெற்று வரும் நிலையில், திட்டத்தின் முடிவில் உங்கள் கையில் ரூ.2.15 லட்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us