AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலை.. யார் யாருக்கு கிடைக்கும்.. முழு விவரம் இதோ!

Tamil Nadu Diwali Dhoti Saree Scheme | தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு, தீபாவளி பண்டிகைக்கு வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலை.. யார் யாருக்கு கிடைக்கும்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Nov 2026 15:09 PM IST

இந்தியாவில் விரைவில் தீபாவளி பண்டிகை (Diwali Festival) கொண்டாடப்பட உள்ளது. வட மாநிலங்கள், தென் மாநிலங்கள் என பரவலாக கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாப்படும் நிலையில், இந்த ஆண்டும் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன. இந்த நிலையில் தான், இந்த ஆண்டு தமிழகத்தில் (Tamil Nadu) முதல் முறையாக தீபாவளி பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த இலவச வேட்டி, சேலை யாருக்கும் கிடைக்கும், இவற்றை பெற தகுதி உள்ளவர்கள் யார் யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலை : தமிழ்நாடு அரசு

தமிழகத்தில் பொதுவாக பொங்கல் பண்டிகையின் போதுதான் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும் வழங்க உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதாவது, முதியோர் ஓய்வூதியம் பெறும் ரேஷன் அட்டை தாரர்களுக்கு இந்த இலவச வேட்டி, சேலையை வழங்க திட்டமிட்டுள்ளதாக தமிழக கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : இனி வாட்ஸ்அப் மூலமே PF பேலன்ஸ் தெரிந்துக்கொள்ளலாம்.. வந்தது அட்டகாசமான அம்சம்!

நேற்று முதலே விநியோகம் செய்யப்படும் வேட்டி, சேலை

தமிழக அரசு அறிவித்தபடியே, நேற்று (நவம்பர் 03, 2026) முதலே ரேஷன் கடைகள் மூலம் வேட்டி, சேலை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நவம்பர் 07, 2026 வரை இந்த இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். அதாவது, தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு வரை இந்த இலவச வேட்டி, சேலைகளை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தீபாவளி.. பட்டாசு விபத்துக்களை இன்சூரன்ஸில் கவர் செய்ய முடியுமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!

வேட்டி, சேலை வாங்க என்ன என்ன கட்டாயம்?

நவம்பர் 03, 2026 முதல் நவம்பர் 07, 2026 வரை தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் இந்த இலவச வேட்டி, சேலைகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, ஓஏபி பென்ஷன் (OAP – Old Age Pension) பெறும் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம். ரேஷன் அட்டையை கொண்டு செல்லும்போது, கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்ட பின்னர் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும்.

பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படுவதை போல அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த இலவச, வேட்டை சேலை வழங்கப்படாது.  ஓஏபி பெறும் முதியவர்களின் குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே இந்த சலுகை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us