AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கடந்த ஆண்டு சாதனையை முறியடித்த அக்டோபர் மாத ஜி.எஸ்.டி வசூல்.. தமிழகத்திற்கு மட்டும் ரூ.7,460 கோடி நிதி பகிர்வு!!

GST Collection October 2026: கடந்த அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் ரூ.2.31 லட்சம் கோடியைத் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு அக்டோபர் மாதப் பங்காக ரூ.7,460 கோடி வழங்கப்பட்டுள்ளதுடன், மாநிலத்தின் சொந்த ஜிஎஸ்டி வசூலும் பெருமளவில் அளவில் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு சாதனையை முறியடித்த அக்டோபர் மாத ஜி.எஸ்.டி வசூல்.. தமிழகத்திற்கு மட்டும் ரூ.7,460 கோடி நிதி பகிர்வு!!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 02 Nov 2026 12:36 PM IST

நவம்பர், 02: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றான சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் கடந்த அக்டோபர் மாதத்தில் வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் மொத்த ஜிஎஸ்டி வரியாக ரூ.2,31,290 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த வரி வசூலானது சுமார் 22.9 சதவீதம் அளவுக்குிகப் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையைக் கழித்தது போக, நிகர ஜிஎஸ்டி வரியாக ரூ.2,00,356 கோடி அரசுக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் நாட்டின் நிதி நிலைத்தன்மைக்குச் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளன.

இதையும் படிக்க: Gold Price : நகை பிரியர்களுக்கு ஷாக்.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. நிலவரம் என்ன?

தமிழகத்திற்கான அக்டோபர் மாதப் பங்குத் தொகை:

மத்திய அரசு வசூலிக்கும் ஜிஎஸ்டி தொகையில் இருந்து மாநிலங்களுக்கு வழங்கும் நிதிப் பங்கீட்டின் அடிப்படையில், தமிழகத்திற்கு அக்டோபர் மாதப் பங்காக மட்டும் ரூ.7,460 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையானது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது சுமார் 8 சதவீதம் அதிகமாகும். இதுமட்டுமின்றி, நடப்பு நிதியாண்டில் அக்டோபர் மாதம் வரை ஒட்டுமொத்தமாகத் தமிழகத்திற்கு மத்திய அரசு தரப்பிலிருந்து ரூ.51,726 கோடி நிதி பகிர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிதி ஒதுக்கீடு மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்திலிருந்து பெறப்பட்ட நேரடி ஜிஎஸ்டி வசூல்:

மத்திய அரசின் நிதிப் பகிர்வு ஒருபுறம் இருக்க, தமிழகத்தின் பல்வேறு வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலமாக மாநிலத்திற்குள்ளேயே அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரியாக ரூ.11,661 கோடி வசூலாகியுள்ளது. இந்தத் தொகையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 3 சதவீதம் அதிகமாகும் என்று புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தொழில் நடவடிக்கைகள், வர்த்தகம் மற்றும் உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி காரணமாகவே இந்த நேரடி வரி வசூல் உத்வேகம் பெற்றுள்ளதாகவும், இது மாநிலத்தின் வலுவான பொருளாதாரச் சுழற்சியைக் காட்டுவதாகவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க: வெறும் 2 கூல் ட்ரிங்க்ஸ் மட்டும் தான் விற்பனை.. மாதம் ரூ.6 லட்சம் வருமானம்.. அசத்தும் அகமதாபாத் தம்பதி!

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி:

நாடு முழுவதும் வர்த்தகச் சூழல் சீராகி வருவதும், வரி ஏய்ப்பு நடவடிக்கைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுத் தடுக்கப்படுவதும் ஜிஎஸ்டி வசூல் தொடர்ச்சியாக அதிகரிக்க முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளதாக மத்திய நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய அதீத வரி வருவாய் வளர்ச்சி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மக்கள் நலத் திட்டங்களைத் தடையின்றிச் செயல்படுத்தவும், மூலதனச் செலவினங்களை அதிகரிக்கவும் மாபெரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. வரவிருக்கும் பண்டிகைக் காலங்கள் மற்றும் இறுதிலாண்டு மாதங்களில் இந்த வரி வசூல் மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு வணிக உலகத்தினரிடையே நிலவுகிறது.

Follow Us