ஜிஎஸ்டி அதிகாரிகளின் அதிகாரம் பறிப்பு.. கூட்டத்தில் திடீர் முடிவு.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
GST Officials Arrest Power Revocation : ஜி. எஸ். டி. அதிகாரிகள் கைது செய்யும் அதிகாரம் ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .
டெல்லியில் 57- ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றிருந்தார். இதில், ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கான கைது செய்யும் அதிகாரங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஜிஎஸ்டி அமலாக்கத்தில் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு கவுன்சில் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜிஎஸ்டி தொடர்பான வழக்குகளை தொடர்வதற்கான வரம்பு ரூ. 1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்துவதற்கும், பொதுவான அபராதத்தை ரூ. 25 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக குறைப்பதற்கும் கவுன்சில் கூட்டம் முடிவு செய்துள்ளது. கடந்த ஜிஎஸ்டி கட்டமைப்பின் கீழ், சி. ஜி. எஸ். டி. சட்டத்தின் 69- ஆவது பிரிவு, குறிப்பிட்ட சில குற்றங்களை செய்ததாக சந்தேகப்படும் ஒருவரை கைது செய்ய மத்திய வரி அதிகாரிக்கு ஆணயிடப்பட்டிருந்தது.
ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது அதிகாரம் ரத்து
தற்போது, ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்யும் அதிகாரத்தை நீக்கி உள்ளது. வரி அதிகாரிகள் நேரடியாக கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதிப்பதற்கு பதிலாக வரி வசூல் மற்றும் பிற சட்ட செயல்முறைகளை நோக்கி அமலாக்கத்தை மாற்றுவதை இந்த மாற்றம் நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், இந்த மன்றம் வழக்கு தொடர்வதற்கான வரம்பை ரூ. 1 கோடியில் இருந்து ரூ. 5 கோடியாக உயர்த்தி உள்ளது. இதன் மூலம் அதிக அளவில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் வழக்குகளுக்கு மட்டுமே குற்றவியல் வழக்கு தொடர முடியும்.
மேலும் படிக்க: மக்கள் சேவையில் இருந்து தேச சேவை’ வரை.. 25 ஆண்டுகால மோடி ஆட்சி




ஜிஎஸ்டி அபராத தொகை ரூ. 10 ஆயிரமாக குறைப்பு
ஜிஎஸ்டி கூட்டத்துக்கு பின்னர், வெளியிடப்பட்ட விவரங்களின் அடிப்படையில் பொதுவாக அபராதம் ரூ. 25 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017- ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபோது மத்திய ஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 132 இன் கீழ் வரும் சில கடுமையான குற்றங்களுக்காக கைது நடவடிக்கை மேற்கொள்ள ஆணையருக்கு பிரிவு 69- இல் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. மோசடியான விலைப்பட்டியல் தயாரித்தல், ஜிஎஸ்டியை வசூலித்து அதை அரசிடம் செலுத்த தவறுதல் மற்றும் தவறான உள்ளீட்டு வரி வரவு கோரிக்கைகள் ஆகியவை இதில் அடங்கும்.
ஜிஎஸ்டி கவுன்சில் விதிமுறைகள்
கடுமையான வரி ஏய்ப்புக்கு எதிரான ஒரு அமலாக்க கருவியாகவே கைது நடவடிக்கை விதிமுறை முதலில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு ஜி. எஸ். டி. கவுன்சில் இந்த விதிமுறையின் நோக்கம் குறித்து விவாதித்தவுடன் மாநிலங்கள் அதன் பயன்பாட்டை சுற்றியுள்ள வரம்புகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ”புதிய முழக்கம் இவைதான்.. நாம் அதைச் செய்து முடிப்போம்” – 2047ம் ஆண்டை இலக்காக நிர்ணயித்த பிரதமர் மோடி!