AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மாயமான பெண் சடலமாக மீட்ட விவகாரம்.. எஸ்.ஐ. மீது விழுந்த பேரிடி.. அதிரடி காட்டிய திருச்சி எஸ்.பி!!

Trichy Sub Inspector Suspend : திருச்சியில் காணாமல் போன பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கவனக்குறைவாக செயல்பட்டதாக துறையூர் காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கமும், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.

மாயமான பெண் சடலமாக மீட்ட விவகாரம்.. எஸ்.ஐ. மீது விழுந்த பேரிடி.. அதிரடி காட்டிய திருச்சி எஸ்.பி!!
கோப்புப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 08 Oct 2026 16:40 PM IST

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகள் சுகன்யா ( 35 வயது). இவரும், கண்ணனூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் சத்தியா ( 38 வயது) என்பவரும் தோழிகள் ஆவர். இவர், சுகன்யாவிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதற்கு, மாதம் தோறும், வட்டி தொகை செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று வழக்கம் போல சத்யாவிடம் கடன் தொகை பெறுவதற்காக சுகன்யா வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால், வெகு நேரம் ஆகியும் சுகன்யா வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதை அறிந்த அவரது தந்தை மனோகரன் மற்றும் உறவினர்கள் அந்த பகுதி முழுவதும் தேடத் தொடங்கினர்.

புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார்

வெகு நேரமாக தேடியும் சுகன்யாவை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், இது தொடர்பாக, மனோகரன் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்வதற்கு காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன், மனோகரன் குடும்பத்தினரை அலைக்கழித்ததாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் பெரிதான நிலையில், இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், துறையூர் உதவி ஆய்வாளர் தினேஷ் குமார் விரைந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளாமல் கவனக்குறைவாக செயல்பட்டது தெரியவந்தது.

மேலும் படிக்க: போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல ப்ளான்.. நாகை துறைமுகத்தில் சிக்கிய பெண்.. குடியுரிமை அதிகாரிகள் அதிரடி!

கவனக்குறைவாக செயல்பட்ட எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

அதன் அடிப்படையில், துறையூர் காவல் உதவி ஆய்வாளர் தினேஷ் குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவிட்டார். அத்துடன், துறையூர் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் முத்து செல்வன் அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஜீவபுரம் காவல் உட்கோட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். முன்னதாக, புலிவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரட்டாம்பட்டி பகுதியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், போலீசார் மற்றும் சுகன்யாவின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

அப்போது, கொலை செய்யப்பட்டு கிடந்தது சுகன்யா என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், சுகன்யாவின் கணவர் துரைராஜ், அவர்களது மகன் விஜய் உள்ளிட்ட 5 பேரை புலிவலம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: மருத்துவர் வேடத்தில் கைவரிசை.. ஸ்டான்லி மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்.. விசாரணையில் வெளிவந்த ஷாக் தகவல்!

Follow Us