AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மருத்துவர் வேடத்தில் கைவரிசை.. ஸ்டான்லி மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்.. விசாரணையில் வெளிவந்த ஷாக் தகவல்!

Stanley Hospital Jewelry Theft : சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவர் வேடம் அணிந்து மாணவிகளின் நகைகளை திருடிய பெண்ணை ஏழு கிணறு போலீசார் அதிரடியாக கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவர் வேடத்தில் கைவரிசை.. ஸ்டான்லி மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்.. விசாரணையில் வெளிவந்த ஷாக் தகவல்!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 07 Oct 2026 14:05 PM IST

சென்னையில் பிரபல ஸ்டான்லி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, பணி புரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு தனியாக விடுதி அமைந்துள்ளது. இங்கு, தங்கி இருந்து வரும் முதுநிலை மாணவி ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது 1.5 பவுன் தங்க சங்கிலி மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக தெரிகிறது. இதேபோல, பிற மாணவிகளின் அறைகளில் இருந்த 13 பவுன் தங்க நகைகளும், 2 ஜோடி வைர கமலம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதை அறிந்த மாணவிகள் விடுதி வளாகத்தில் தேடிய போது, ஒரு பெண் மருத்துவர் வேடம் அணிந்து சுற்றி திரிவது தெரிய வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில், அந்த பெண்ணை மாணவிகள் தடுத்து நிறுத்தி விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

மருத்துவர் வேடமணிந்து நகை திருட்டு

உடனே, அந்த பெண்ணை ஏழு கிணறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மாணவிகளின் நகைகளை திருடியது உறுதி செய்யப்பட்டது. இதில், அந்த பெண் சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த சுவேதா என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அவரது கணவர் மற்றும் தந்தை உயிரிழந்த நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக திருட்டில் ஈடுபட்டதாக சுவேதா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: 10 ஆண்டு திருமண வாழ்க்கை கசந்தது.. கணவனை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் பெண் எஸ்கேப்.. வடபழனியில் அதிர்ச்சி சம்பவம்!

சிகிச்சைக்கு வந்த இடத்தில் கைவரிசை

சுவேதாவுக்கு 2- ஆவது திருமணம் ஆன நிலையில் கணவருடன் பெங்களூரில் வசித்து வருகிறார். தற்போது, அவருக்கு கர்ப்பப்பை தொடர்பாக உடல்நல பிரச்சனை இருந்து வந்ததன் காரணமாக சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு, சிகிச்சைக்காக வந்து சென்றதை பயன்படுத்தி மருத்துவர் வேடம் அணிந்து சுற்றி திரிந்ததும், அப்போது மருத்துவ மாணவிகள் விடுதிக்குள் சென்று நகைகளை திருடியதும் தேடி வந்தது.

திருடிய நகைகளை விற்றுவிட்டு பெங்களூர் செல்ல திட்டம்

திருடிய நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தை கிழக்கு தாம்பரத்தில் வசித்து வரும் தனது தாயின் குடும்ப செலவுக்காக ஸ்வேதா கொடுத்து விட்டு, அங்கிருந்து பெங்களூர் புறப்பட்டு செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். ஆனால், மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், நகை திருடிய சுவேதாவை போலீசார் அதடியாக கைது செய்துள்ளனர். மருத்துவர் வேடத்தில் மாணவிகளின் நகைகளை திருடிய சம்பவம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: நீலகிரியில் பரிதாபம்.. கார் மீது உருண்டு விழந்த ராட்சத பாறை.. மனைவி கண்முன்னே பறிபோன கணவன் உயிர்!

Follow Us