“எங்களை தொந்தரவு பண்ணான்.. அதான் போட்டோம்” மயிலாப்பூர் ஏசி மெக்கானிக் கொலையில் பரபரப்பு வாக்குமூலம்!
Mylapore AC Mechanic Murder : சென்னையில் ஏசி மெக்கானிக் கொடூர கொலையில் தொடர்புடைய 3 கல்லூரி மாணவர்களை மயிலாப்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் கொலைக்கான பகீர் காரணத்தை வாக்கு மூலமாக அளித்துள்ளனர். அது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
சென்னை மாவட்டம், வேளச்சேரி பகுதியில் உள்ள பாலாஜி நகரில் வசித்து வருபவர் சத்தியசீலன் ( 20 வயது). இவர், டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துவிட்டு ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். தொடக்கத்தில் மயிலாப்பூர் வீரபத்திரன் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானார். அப்போது, கஞ்சா கும்பலோடு ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து மயிலாப்பூர் வீட்டை காலி செய்து விட்டு வேளச்சேரியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு மயிலாப்பூர் வீரபத்திரன் தெருவில் வசிக்கும் தனது நண்பர் சபரி என்பவருடன், சத்தியசீலன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சத்தியசீலனை சரமாரியாக வெட்டி கொன்று விட்டு தப்பி ஓடியது. இதை அறிந்த மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
3 கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார்
சென்னையை உலுக்கிய இந்த கொலை சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், சத்தியசீலனுடன் பள்ளியில் ஒன்றாக படித்து வந்த மாணவர்கள் அவரை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. அதன்படி, மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த 3 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் 17 வயதுடைய மாணவர்கள் ஆவர். இதனால் அவர்கள் குறித்த தகவலை போலீசார் வெளியிடவில்லை.
மேலும் படிக்க: 10 ஆண்டு திருமண வாழ்க்கை கசந்தது.. கணவனை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் பெண் எஸ்கேப்.. வடபழனியில் அதிர்ச்சி சம்பவம்!




ஒரே பள்ளியில் ஒன்றாக படித்து வந்த மாணவர்கள்
இவர்கள் சென்னையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தனர். அவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சத்தியசீலனை கொலை செய்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலைக்கான காரணம் குறித்து 3 மாணவர்களும் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளனர். இதில், சத்தியசீலன் எங்களோடு ஒரே பள்ளியில் படித்து வந்தார். பள்ளி காலத்தில் அவர் எங்களுக்கு சீனியர். அப்போதே, அவருக்கும், எங்களுக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது.
எங்களை தொந்தரவு செய்ததால் கொலை செய்தோம்
அவர் சீனியர் என்பதால் எங்களிடம் அடிக்கடி சண்டை போட்டு அடித்து உதைப்பார். தற்போது அவர் மயிலாப்பூரில் இருந்து வேளச்சேரியில் வசித்து வந்தார். இருந்தாலும் மயிலாப்பூர் பகுதிக்கு வந்து எங்களிடம் சண்டையிடுவார். இதனால், அவரை கொலை செய்ய திட்டமிட்ட நிலையில், சம்பவத்தன்று இரவு அவரது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது அரிவாளால் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டோம் என்று தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க: ரூ.4,730 கோடி மணல் குவாரி முறைகேடு.. தோண்டி துருவிய ED.. சீனில் இறங்கிய DVAC.. பீதியில் திமுக புள்ளிகள்!