10 ஆண்டு திருமண வாழ்க்கை கசந்தது.. கணவனை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் பெண் எஸ்கேப்.. வடபழனியில் அதிர்ச்சி சம்பவம்!
Chennai Gold Stolen Women Arrest : சென்னையில் கணவனை தவிக்கவிட்டு 150 பவுன் தங்க நகையுடன் கள்ளக்காதலுனுடன் ஓடிச் சென்ற பெண்ணை வடபழனி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து பாதி நகைகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை மாவட்டம், வடபழனி பகுதியில் வசித்து வருபவர் ஆதித்தன். இவரது மனைவி இலக்கியா. தம்பதிக்கு கடந்த 2015- ஆம் ஆண்டு இரு விட்டார் சம்பந்தத்துடன் திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், இலக்கியா திடீரென வீட்டில் இருந்த சுமார் 150 பவுன் தங்க நகைகள் மற்றும் குழந்தையுடன் திடீரென மாயமானார். இதை அறிந்த ஆதித்தன் சுற்றுவட்டார பகுதிகளில் தேடியும் இலக்கியாவையும், மகனையும் கண்டுபிடிக்க முடியவில்லை. வெகு நாட்கள் ஆகியும் தனது மனைவி மற்றும் குழந்தை குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர், இது தொடர்பாக வடபழனி காவல் நிலையத்தில் மனைவி மற்றும் மகனை காணவில்லை என்று ஆதித்தன் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி
இதன் காரணமாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதித்தன் வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில், வீட்டில் இருந்து நகையுடன் மாயமான இலக்கியாவை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வடபழனி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கேரள மாநிலத்தில் ஜிஷ்ணு என்பவர் உடன் வீட்டிலிருந்து வெளியேறியது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கடந்த 6 ஆண்டுகளாக இலக்கியாவுக்கும், ஜிஷ்ணுவுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
மேலும் படிக்க: ராணிப்பேட்டையில் பழிக்கு பழி சம்பவம்… விசிக பிரமுகர் கொலையில் “திடுக்”.. கைதானவர்கள் பரபர வாக்குமூலம்!




150 பவுன் நகையுடன் மாயமான பெண் கைது
இதனிடையே, ஜிஷ்ணுவின் அண்ணனுக்கு, இலக்கியா இன்ஸ்டாகிராம் வாயிலாக மெசேஜ் அனுப்பி உள்ளார். ஜிஷ்ணுவுடன் பல்வேறு இடங்களுக்கு சென்றிருப்பதாகவும், தனிமையில் இருந்திருப்பதாகவும், இதன் காரணமாக நான் கர்ப்பம் அடைந்து 6 மாதங்களில் கலைத்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில், இலக்கியா மற்றும் ஜிஷ்ணு ஆகியோர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டறிந்தனர். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு வசித்து வந்த இலக்கியாவை கைது செய்து வடபழனி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
வடபழனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
அவரிடம் இருந்து திருடப்பட்ட 150 பவுன் நகைகளில் பாதி நகைகளை போலீசார் மீட்டு உள்ளனர். மீதி நகைகள் எங்கே உள்ளது என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், கணவர் ஆதித்தனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு உள்ளிட்டவை தொடர்பாகவும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: ரூ.4,730 கோடி மணல் குவாரி முறைகேடு.. தோண்டி துருவிய ED.. சீனில் இறங்கிய DVAC.. பீதியில் திமுக புள்ளிகள்!