வெற்றி பயணத்தால் காலியாக ஓடும் பேருந்துகள்.. குடும்பத்தை எப்படி ஓட்டுவது? மனக்குமுறலை கொட்டிய ஓட்டுநர்!
Private Bus Driver About Vettri Payanam : வெற்றி பயணம் திட்டத்தால் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் மட்டும் இன்றி அதன் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக மிகவும மனக்குமுறளுடன் ஓட்டுநர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது .
தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு வெற்றி பயணம் திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் அண்மையில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் தலையில் துண்டு போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், இந்த திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்துகளின் உரிமையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், வெற்றி பயணம் திட்டத்தால் தனியார் பேருந்து ஊழியர்களின் நிலை அதல பாதாளத்துக்கு சென்றுள்ளதாக தனியார் பேருந்து ஓட்டுனர் ஒருவர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அந்த நபர் என்ன பேசினார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி வழித்தடத்தில்
தமிழகத்தில் மகளிர் வெற்றிப் பயணம் திட்டத்தால் நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் தனியார் பேருந்தில் ஒருவர் கூட ஏறவில்லை. இப்படி இருந்தால் பேருந்தை எப்படி இயக்குவது. கூட்டம் இல்லாததால் வண்டியை இயக்க வேண்டாம் என்று ஓனர் கூறிவிட்டார். இதனால், தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் மட்டுமின்றி ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு உள்ளது. மக்கள் கூட்டம் இன்றி ஒரு தடவை கூட பேருந்தை இயக்காமல் இருந்தது கிடையாது.




மேலும் படிக்க: சோஷியல் மீடியா கோடீஸ்வரி-க்கு வந்த சோதனை.. நகை திருட்டு வழக்கில் இன்ஸ்டா பிரபலம் மதுமிதா.. என்ன கொடுமை சாமி!
ஒரு நாளைக்கு ரூ. 1500 வரை தான் வருமானம் வருகிறது
நாகப்பட்டினம் சுற்று வட்டார பகுதி முழுவதும் வெற்றி பயணம்.. வெற்றி பயணம் என பெண்கள் அதனை தேடி செல்கின்றனர். நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் நிற்கும் பெண்கள் அனைவரும் அரசின் இலவச பேருந்தில் பயணிப்பதற்காக காத்திருக்கின்றனர். இன்று இயக்கப்பட்ட தனியார் பேருந்து ஒன்றில் ரூ. 1,300 முதல் ரூ. 1,500 வரை மட்டுமே வருமானம் வந்துள்ளது. இப்படி இருந்தால் எப்படி வாகனத்தை இயக்குவது என்று தெரியவில்லை.
த.வெ.க அரசின் வெற்றிப்பயணத் திட்டத்தால் காத்திருந்து அரசுப் பேருந்துகளில் பயணிக்க விரும்பும் பெண்கள்.. கவலையுடன் வீடியோ வெளியிட்ட தனியார் பேருந்து ஓட்டுநர்.!
#TVK #privateBus https://t.co/6KMx2oZqM6
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) October 6, 2026
குடும்பத்தையும், பொழப்பையும் எப்படி ஓட்டுவது
இப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி குடும்பத்தை ஓட்டுவது, பொழப்பை ஓட்டுவது என்று தெரியவில்லை. ரொம்ப மன உளைச்சலாக இருந்து வருகிறது. இதற்கு என்ன தீர்வு என்பதும் எங்களுக்கு தெரியவில்லை என்று மிகவும் மன வருத்தத்துடன் அந்த நபர் பேசியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க: விஜய்க்கு மாட்டு வண்டி ஓட்டியவர் யார்? முதல்வரே குற்றவாளியை காப்பாற்றுகிறாரா.. ஆர்.எஸ்.பாரதி கேட்ட கேள்வி!