கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவது யார்? கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் விஜய் – வெளியான முக்கிய தகவல்
CM Vijay’s Kolathur Constituency Meeting : தவெக கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய்யின் முகாம் இல்லத்தில் நவம்பர் 23, 2026 நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், இடதுசாரி கட்சிகளின் எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னை, நவம்பர் 22 : கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, சிகிச்சை பலனின்றி கடந்த நவம்பர் 19, 2026 அன்று காலமானார். இந்நிலையில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக சட்டமன்ற செயலகம் நவம்பர் 22, 2026 இன்று அறிவித்தது. இந்த நிலையில் தவெக கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் விஜய் (CM Vijay) நவம்பர் 23, 2026 நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் விஜய்
கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பலம் வாய்ந்த வேட்பாளராக கருதப்பட்ட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தவெக எம்.எல்.ஏ, வி.எஸ்.பாபு அபார வெற்றி பெற்றார். வெற்றியைக் குறிப்பிடும் வகையில் அவரது சைகை சமூக வலைதளஙகளில் வைரலானது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர், 9, 2026 அன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிக்க : சோனியா குடும்ப கதையை கேட்க நேரமிருந்தது.. ஆனால் விவசாயிகள் பற்றி பேச நேரமில்லையா முதல்வர் அவர்களே? எடப்பாடி ஆக்ரோஷம்!




கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த நவம்பர் 19, 2026 மாரடைப்பு காரணமாகத வி.எஸ்.பாபு உயிரிழந்தார். முன்னதாக சென்னை கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் நவம்பர் 18, 2026 அன்று வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து விளக்கம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் அடுத்த நாளே அவர் மரணமடைந்ததாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவரது கொளத்தூர் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக சட்டமன்ற செயலகம் நவம்பர் 22, 2026 அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு?
முன்னதாக, தமிழ்நாட்டில், திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், விராலிமலை, பெருந்துறை, கரூர் உள்ளிட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தற்போது கொளத்தூர் சட்டமன்ற தொகுதியும் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சட்டப் பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 228 ஆகவும், ஆளும் தவெகவின் பலம் 108 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம்.. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு அதிரடி முடிவு!!
இந்த நிலையில், தவெக கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய்யின் முகாம் இல்லத்தில் நவம்பர் 23, 2026 நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், இடதுசாரி கட்சிகளின் எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தவெக கூட்டணி சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து முடிவெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திருப்பரங்குன்றம் மற்றும் மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்களும் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.