AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சோனியா குடும்ப கதையை கேட்க நேரமிருந்தது.. ஆனால் விவசாயிகள் பற்றி பேச நேரமில்லையா முதல்வர் அவர்களே? எடப்பாடி ஆக்ரோஷம்!

Edappadi Accusations CM Vijay : டெல்லிக்கு சென்று சோனியா காந்தியின் குடும்ப கதையை கேட்டு சிரிக்க நேரம் இருக்க, காவிரி நீர் விவகாரத்தில் தமிழக விவசாயிகளை நேரில் சந்திக்க நேரம் இல்லையா முதல்வர் விஜய் அவர்களே என்று எடப்பாடி கேள்வியெழுப்பியுள்ளார்.

சோனியா குடும்ப கதையை கேட்க நேரமிருந்தது.. ஆனால் விவசாயிகள் பற்றி பேச நேரமில்லையா முதல்வர் அவர்களே? எடப்பாடி ஆக்ரோஷம்!
எடப்பாடி- முதல்வர் விஜய்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 22 Nov 2026 13:54 PM IST

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் 2 இடையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதுவும் ஒரே காரணத்துக்காக 2 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி ஒரு விசயம் நடந்திருப்பதே தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய்க்கு தெரியாது என்பதால், உச்சநீதிமன்ற தீர்ப்பில் இருந்து சில பக்கங்களை எனது பதிவில் இணைத்துள்ளேன். இந்த அவமானம் வெற்றி மாடல் புத்தகத்தின் எந்த பக்கத்தில் வரப்போகிறது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மாட்டீர்கள். கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியோடு காவிரி நீர் பங்கீடு தொடர்பாக பேச மாட்டீர்கள். இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தையும் ஒழுங்காக நடத்துவது கிடையாது.

கர்நாடக முதலவர் கண்டிக்க வக்கில்லாத தவெக அரசு

தமிழகத்துக்கு எதிராக பேசி வரும் கர்நாடக முதல் அமைச்சர் டி. கே. சிவகுமாரை ஒரு வார்த்தை கூட கண்டிக்க வக்கில்லாமல் சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் அவரோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளீர்கள். கடந்த ஜூன் 12- ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க முடியாமல் ஏற்கனவே குறுவை சாகுபடி வீணாகிப் போய் உள்ளது. தற்போதும், கர்நாடக அரசு காவிரி நீரை முழுமையாக வழங்காமல் இருப்பதாலும், தமிழகத்து உரிமையான நீரைப் பெற வக்கற்ற இங்கு உள்ள தமிழக வெற்றுக் கழக கூட்டணி அரசாலும், விவசாயிகளுக்கு தண்ணீர் வந்து சேராமல் உள்ளது.

மேலும் படிக்க: செஞ்சி சிறுமி மாயம்! சிபிசிஐடி விசாரணை வளையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி.. கிடுக்கிப்பிடி விசாரணை!

சோனியா குடும்ப கதையை மட்டும் கேட்க நேரமிருக்கிறதா

இந்த கையால் ஆகாத தமிழக வெற்றிக் கழக அரசால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட உள்ளது. டெல்லிக்கு சென்று சோனியா காந்தியின் குடும்ப கதையை கேட்டு சிரிப்பதற்கு முதல் அமைச்சர் ஜோசப் விஜய்க்கு இருந்த நேரம், தமிழக விவசாயிகளை பற்றி பேசுவதற்கு கொஞ்சம் கூட நேரம் இல்லையா முதல்வர் விஜய் அவர்களே. எப்போது பார்த்தாலும் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று நீலிக் கண்ணீர் வடிப்பீர்களே. உங்கள் ஆச்சரிய குறி ஆட்சி தொடர்ந்து தமிழகத்துக்கு கொடுத்து வரும் அவமானங்களை எல்லாம் பார்த்தால் எப்படி தெரிகிறது.

சுயநலத்துக்காக தமிழக உரிமைகளை தாரைவார்க்கும் முதல்வர்

உங்கள் சுயநலத்துக்காக தமிழக உரிமைகளை தாரை வார்க்க தான் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தீர்களா என்று கேட்கத் தோன்றுகிறது. முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யே தமிழகத்தின் ஜீவாதார உரிமையோடு, விவசாய மக்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, நான் என தொடர்ந்து அதிமுக கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு பெற்ற உரிமை இதுவாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: செக்கானூரணி லாக்கப் மரணம்! உண்மையிலேயே முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளதா? அப்படி இருந்தால்.. கனிமொழி காட்டமான கேள்வி!

Follow Us