AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather report: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்… கார்த்திகை தீபமன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Tamil Nadu Weather Alert: தமிழகத்தில் நவம்பர் 23, 2026 முதல் நவம்பர் 27, 2026 வரை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பாக கார்த்திகை தீப திருநாளான நவம்பர் 24, 2026 செவ்வாய்கிழமை 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Weather report: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்… கார்த்திகை தீபமன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 22 Nov 2026 15:52 PM IST

சென்னை, நவம்பர் 22 : தென்மேற்கு வங்கக்கடலிலிருந்து மத்தியமேற்கு வங்கக்கடல் வழியாக வடக்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் வரை சுமார் 1.5 கி மீ உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Low Pressure Area) நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நவம்பர் 23, 2026 முதல் நவம்பர் 27, 2026 வரை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பாக கார்த்திகை தீப திருநாளான நவம்பர் 24, 2026 செவ்வாய்கிழமை 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் நவம்பர் 22, 2026 இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதியிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : செஞ்சி சிறுமி மாயம்! சிபிசிஐடி விசாரணை வளையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி.. கிடுக்கிப்பிடி விசாரணை!

அதனைத் தொடர்ந்து நவம்பர் 23, 2026: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபத்திருநாளில் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மேலும் கார்த்திகை தீபத் திருநாளான நவம்பர் 24, 2026 செவ்வாய்கிழமை கடலூர், தஞ்சாவூர், திருவாரூர். மயிலாடுதுறை, நாகப்பட்டினம். புதுக்கோட்டை சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர். ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 25, 2026 புதன்கிழமை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : வீட்டிலிருந்து வந்த கெட்ட வாடை.. “40 ஆண்டுகால திருமண வாழ்க்கை இப்படியா முடியனும்”.. சென்னையில் முதிய தம்பதிக்கு நேர்ந்த கொடுமை..

மேலும் நவம்பர் 26, 2026 திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் நவம்பர் 27, 2026 கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களும் தமிழகத்தின் பிற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us