AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. நாளையிலிருந்து கனமழை ஸ்டார்ட்.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!

Tamilnadu Weather Today: தமிழக்கத்தில் நாளை கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை நவ.23 முதல் தீவிரமடைகிறது.

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. நாளையிலிருந்து கனமழை ஸ்டார்ட்.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 22 Nov 2026 06:50 AM IST

சென்னை, நவ.22: தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி மீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். தொடர்ந்து, தமிழகத்தில் நாளை முதல் கனமழை வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : “கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியா?”.. அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

இன்று மழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்று (நவ.22) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை கனமழைக்கு வாய்ப்பு:

தொடர்ந்து, நாளை (நவ.23) கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் நாட்களில் மழை நிலவரம்:

அதனைத்தொடர்ந்து, நவ.24-ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், நவ.25ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “முதலமைச்சருக்கு அரோகரா முழக்கம்!”.. திருச்செந்தூர் விழா விவகாரத்தில் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (நவ.22) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us