AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செஞ்சி சிறுமி விவகாரம்.. இரவு முழுவதும் எரிந்த செங்கல் சூளை.. மீண்டும் திரும்பிய சிபிசிஐடி பார்வை!

Gingee Girl Missing : செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் அவரது வீட்டின் அருகே உள்ள செங்கள் சூளையில் மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், செங்கல் சூளை சாம்பல் உள்ளிட்டவற்றை சல்லடை போட்டு சோதனை செய்து வருகின்றனர்.

செஞ்சி சிறுமி விவகாரம்.. இரவு முழுவதும் எரிந்த செங்கல் சூளை.. மீண்டும் திரும்பிய சிபிசிஐடி பார்வை!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 21 Nov 2026 21:54 PM IST

செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் மீண்டும் செங்கல் சூளை உரிமையாளர், செங்கல் சூளையில் சி. பி. சி. டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 7 வயதான ஹேமலதா என்ற சிறுமி காணாமல் போய் இன்றுடன் 41 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த வழக்கில், சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு 31 நாள்கள் நிறைவடைந்துள்ளது. ஆனால், தற்போது வரை சிறுமி எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில், சிறுமையின் வீட்டின் அருகே அவர் காணாமல் போன நாளன்று இரவு முழுவதும் எரிந்து கொண்டிருந்த செங்கல் சூளையிலும், அதன் உரிமையாளர், தொழிலாளர்கள் ஆகியோரிடம் மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவு முழுவது எரிந்த செங்கல் சூளையில் போலீஸ் விசாரணை

சிறுமி மாயமானது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவரது வீட்டின் அருகே உள்ள செங்கல் சூளை இரவு முழுவது எரிந்து கொண்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. அதன்படி, செங்கல் சூளைக்கு சென்ற போலீசார், அதன் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், செங்கல் சூளை எரிந்த இடத்தில் இருந்த சாம்பல், செங்கல் உள்ளிட்டவற்றில் தடய அறிவியல் நிபுணர்கள் பல்வேறு கட்ட சோதனைகளை மேற்கொண்டிருந்தனர். அதில், எந்த துப்பும் கிடைக்காத நிலையில் வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை நடத்தினர்.

மேலும் படிக்க: காதலி மீது ஏற்பட்ட சந்தேகம்! வீடு புகுந்து கத்தியால் குத்தி கொன்ற காதலன்.. தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்!

சரித்திர பதிவேடு குற்றவாளியை சுடுகாட்டுக்கு அழைத்து சென்று விசாரணை

அதிலும், எந்த தகவலும் தற்போது வரை கிடைக்கவில்லை. இதன் காரணமாக, மீண்டும் போலீசாரின் சந்தேகப் பார்வை செங்கல் சூளை பக்கம் திரும்பி உள்ளது. இதில், செங்கல் சூளையில் உள்ள சாம்பல், பொருள்கள், இடங்கள் ஆகியவற்றை போலீசார் சல்லடை போட்டு அலசி ஆராய்ந்து வருகின்றனர். அத்துடன், சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜதுரை என்பவரையும் போலீசார் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர். அவரை, அந்தப் பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

சல்லடை போட்டு விசாரணை செய்யும் சிபிசிஐடி

முன்னதாக, செங்கல் சூளையில் தடய அறிவியல் நிபுணர்கள் சேகரித்த சாம்பலில் இருந்த தடயங்களை போலீசாருக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதன் அடிப்படையில், இந்த அதிரடி விசாரணை நடைபெறுவதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக, சிறுமியின் தலை வடிவேல், தாய் பவானி, பாட்டி, எதிர் வீட்டுப் பெண் ஆகியோரிடம் போலீசார் தனித்தனியாக தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனர். தற்போதைய விசாரணையில் ஏதேனும் துப்பு துலங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: பெண்கள் பாதுகாப்பில் வாய்கிழிய வசனம் பேசிய விஜய்! தரங்கெட்ட தவெக ஆட்சியில் மோசமான நிலையில் தமிழகம்.. தூத்துக்குடி சம்பவத்தில் கனிமொழி விளாசல்!

Follow Us