AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

195 நாட்களில் ரூ.1.14 லட்சம் கோடி முதலீடுகள் – 1.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – தமிழக அரசு தகவல்

Tamil Nadu Investment and Job Update : தமிழகத்துக்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் கடந்த 195 நாட்களில் ரூ.1.14 லட்சம் கோடி முதலீடுகள் ஈற்க்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 1.32 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தமிழக தொழில்துறை தெரிவிததுள்ளது.

195 நாட்களில் ரூ.1.14 லட்சம் கோடி முதலீடுகள் – 1.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – தமிழக அரசு தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Nov 2026 21:37 PM IST

சென்னை, நவம்பர் 21 : தமிழகத்துக்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் கடந்த 195 நாட்களில் ரூ.1.14 லட்சம் கோடி முதலீடுகள் ஈற்க்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 1.32 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தமிழக தொழில்துறை தெரிவிததுள்ளது. தமிழக முதலீடு தொடர்பான தகவல்கள் ஆந்திராவுக்கு (Andhra Pradesh) கசியவிடப்பட்டதாக கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் 15 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

195 நாட்களில் ரூ.1.14 லட்சம் கோடி முதலீடுகள்

புதிய அரசு பொறுப்பேற்ற 6 மாதங்களில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து தொழில் துறை செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் வாகன உற்பத்தித் துறையில் ரூ.17,073 கோடி, மின்னணுவியல் துறையில் ரூ.16,832 கோடி, ஜவுளித் துறையில் ரூ.7,871 கோடி என பல்வேறு துறைகளில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ரீல்ஸ் மோகத்துக்கு ஒர் அளவே இல்லையா? 80 அடி கிணற்றில் 2 மணி நேரமாக சிக்கி தவித்த இளைஞர்.. கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த பரபர சம்பவம்!

மேலும், 17 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகளாவிய திறன் மையங்கள் வாயிலாக 5,870 நபர்களுக்கு உயர் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தம் 112 முதலீட்டுத் திட்டங்களில், 83 திட்டங்கள் நிலம் உறுதி செய்யப்பட்ட அல்லது அதற்கு மேற்பட்ட நிலையை எட்டியுள்ளன. 23 திட்டங்கள் அடிக்கல் நாட்டும் நிலையை எட்டியுள்ளன அல்லது அதைக் கடந்துள்ளன. இதன் மூலம், ஒட்டுமொத்த திட்டச் செயலாக்க முன்னேற்றம் 74.11 சதவீதமாக உள்ளது.

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான அனுமதிகளை விரைவாக வழங்கும் வகையில் 21 வேலை நாட்களுக்குள் அனுமதி வழங்கும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 11 துறைகளில் 25-க்கும் மேற்பட்ட தொழில் எளிதாக்கச் சீர்திருத்தங்கள் மற்றும் முதலீட்டு திட்டங்களை விரைவுபடுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 195 நாட்களில் 23 துறைகளில் 112 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.1,14,811.91 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதுடன், 1,32,771 பேருக்கு வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலீடு தொடர்பான தகவல்கள் ஆந்திராவுக்கு கசிந்ததாக வெளியான குற்றச்சாட்டு குறித்து மறைமுகமாக பதிலளித்த ஆந்திரா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் பிரேக்கிங்: ஆந்திராவின் முதலீட்டு ரகசியம் கசிந்துவிட்டது. முதலீட்டாளர்களுக்கு அதே நாளில் பதிலளிப்பது தான் அந்த ரகசியம். மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்றலாம் என்று கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

இதையும் படிக்க : காதலி மீது ஏற்பட்ட சந்தேகம்! வீடு புகுந்து கத்தியால் குத்தி கொன்ற காதலன்.. தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்!

இதற்கு பதிலளித்துள்ள தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள பதிவில், வேகம் முக்கியம்தான் என்றாலும், அதைவிடச் சிறப்பானது திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்துவதே ஆகும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டுத் தொழில் துறையைப் பொறுத்தவரை, முதலீட்டாளர்களுக்கு உறுதிமொழிகளை அளிப்பதுடன் நின்றுவிடாமல், அவற்றைச் செயல்படுத்துவதற்கான இலக்குகளை நிர்ணயம் செய்து நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டுள்ளார்.

Follow Us