AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஹாலிடே இல்ல ஆனால்.. தனுஷின் ஓ.எம் திரைப்பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? – அறிவிப்பு இதோ!

O.M Movie First Day Collections: தென்னிந்தியாவில் ரசிகர்கள் கொண்டாடும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நடிகர் தனுஷ். இவரின் 55வது திரைப்படமாக கடந்த 2026 நவம்பர் 20ம் தேதியில் வெளியான படம்தான் ஓ.எம். இப்படமானது வெளியாகி ஒரு நாளை கடந்த நிலையில், உலகமெங்கும் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

ஹாலிடே இல்ல ஆனால்.. தனுஷின் ஓ.எம் திரைப்பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? – அறிவிப்பு இதோ!
ஓம் திரைப்படத்தின் முதல் நாள் உலகளாவிய வசூல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 21 Nov 2026 20:28 PM IST

நடிகர் தனுஷ் (Dhanush) தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவரின் நடிப்பில் தமிழில் ஆண்டுக்கு 2 முதல் 3 திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இந்த 2026ம் ஆண்டு தொடக்கத்தில் கர (Kara Movie) என்ற திரைப்படம் வெளியான நிலையில், இந்த படமானது எதிர்பார்த்திருந்த வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்த நிலையில், கதைக்களம் காரணமாக மக்களிடையே இப்படம் வரவேற்கப்படவில்லை. இந்த படத்திற்கு பின் 2026ல் வெளியாகியிருந்த 2வது திரைப்படம்தான் ஓ.எம் (O.M Movie). இதை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Director Rajkumar Periasamy) இயக்கியிருந்த நிலையில், தனுஷ் ஹீரோவாக மற்றும் தயாரிப்பாளராக இணைந்து பணியாற்றியிருந்தார். இந்த படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி (Mammootty), நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) மற்றும் ஸ்ரீலீலா (Sreeleela) உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படமானது நேற்று (20/11/2026) திரையரங்குகளில் வெளியான நிலையில், முதல் நாள் முடிவில் உலகமெங்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்த வருடத்தை சிறப்பாக்கிய அன்பான ஃபேன்ஸ்.. சீன் பட வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்ட சூர்யா!

தனுஷின் ஓ.எம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம்:

இப்படம் திரையரங்குகளில் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுவந்த நிலையில், முதல் நாள் முடிவில் உலகமெங்கும் சுமார் ரூ 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஓ.எம் திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தனது பிரம்மாண்டமான பார்வை மற்றும் சிறப்பான இயக்கத்தின் மூலமாக உருவாக்கியுள்ளார்.

இதையும் படிங்க: மிஷ்கினுக்கும் எனக்கும் தந்தை – மகள் போன்ற உறவு உள்ளது… நெட்டிசன்களுக்கு நெத்தியடி பதிலளித்த கீர்த்தி சுரேஷ்!

இப்படத்தில் நடிகர் தனுஷ் ஸ்பை போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் மம்முட்டி இப்படத்தில் ஒரு அதிரடி கேங்ஸ்டராக நடித்துள்ள. நடிகை சாய் பல்லவியும் 10 ஆண்டுகளில் நடித்திடாத போலீஸ் வேடத்தில் இப்படத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகை ஸ்ரீலீலா இப்படத்தில் தனுஷின் மனைவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓ.எம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவு:

தனுஷின் ஓ.எம் திரைப்படமானது தற்போது வார இறுதியில் உள்ள நிலையில், ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் பல திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் நடிகை சாய் பல்லவியின் நடிப்பு சிறப்பாக வந்துள்ளதாகவும், சாய் பல்லவிதான் இப்படத்தின் ஹீரோவாக தெரியாவதாகவும் இணையத்தில் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்துவருகிறார்கள். மேலும் வார இறுதியில் இன்னும் இப்படம் அதிகமாக வசூல் செய்தும் என கூறப்படுகிறது.

Follow Us