அழுத்தம் தாங்காமல் வெடித்த பெட்ரோல் டேங்க் மூடி – ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி
Gas Tank Explosion Death : கோவை பெட்ரோல் பங்க் ஒன்றில், ஆட்டோவிற்கு எரிவாயு நிரப்பிக் கொண்டு இருந்த போது அழுத்தம் தாங்காமல் டேங்க் மூடி பயங்கரச் சத்தத்துடன் வெளியேறியதாக கூறப்படுகிறது. மூடி வேகமாக வந்து தலையில் தாக்கியதில், பீளமேட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை, நவம்பர் 21 : கோவையில் ஆட்டோவிற்கு எரிவாயு நிரப்பும் போது பெட்ரோல் (Petrol) டேங்க் மூடி வெடித்துத் தலையில் பாய்ந்ததில் ஆட்டோ ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் சாலையில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில் நடந்த இந்த கோர விபத்தில் பீளமேட்டைச் சேர்ந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அழுத்தம் தாங்காமல் வெடித்த பெட்ரோல் டேங்க் மூடி வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் பலி
கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், ஆட்டோவிற்கு எரிவாயு நிரப்பிக் கொண்டு இருந்த போது அழுத்தம் தாங்காமல் டேங்க் மூடி பயங்கரச் சத்தத்துடன் வெளியேறியதாக கூறப்படுகிறது. மூடி வேகமாக வந்து தலையில் தாக்கியதில், பீளமேட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிக்க : அனிருத் – காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி! சென்னைக்கு வந்த தெலங்கானா, கேரள முதல்வர்கள்




கோயம்புத்தூர் பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. ஆட்டோ ஓட்டுநரான இவர், தனது ஆட்டோவிற்கு எரிவாயு நிரப்புவதற்காகக் கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் எருகம்பெனி பகுதியில் அமைந்து உள்ள பெட்ரோல் பங்கிற்குச் சென்று உள்ளார். அங்கு ஆட்டோவிற்கு எரிவாயு நிரப்பும் பணி நடைபெற்றுக் கொண்டு இருந்த போது, எதிர்பாராத விதமாக வாகனத்தின் டேங்க் மூடி அதிகப்படியான அழுத்தம் தாங்காமல் பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
போலீசார் தீவிர விசாரணை
வெடித்துத் தெறித்த அந்த மூடி, அருகில் நின்று கொண்டு இருந்த ஆட்டோ ஓட்டுநர் முத்துச்சாமியின் தலையில் அதிவேகமாகப் பாய்ந்தது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முத்துச்சாமி, ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கோர விபத்தைக் கண்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் சக வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிக்க : நேருக்கு நேர் வந்த 2 இரு சக்கர வாகனங்கள்.. ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து.. திருப்பூரில் அடுத்தடுத்து பலியான இருவர்!
விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாய்பாபா காலனி காவல் துறையினர், உயிரிழந்த முத்துச்சாமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அதிக அழுத்தம் காரணமாக விபத்து ஏற்பட்டதா ? அல்லது வாகனத்தின் டேங்க் பராமரிப்பில் குறைபாடு இருந்ததா ? என்பது குறித்துப் பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைக் கைப்பற்றிப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சக ஆட்டோ ஓட்டுநரின் இந்த அகால மரணம் கோவை ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பீளமேடு பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.