மருத்துவ பரிசோதனையின் போது தப்பி ஓடிய கைதி.. கோயமபுத்தூர் பரபரப்பு!
Prisoner Escapes Hospital During Medical Check-up | கோயம்புத்தூரில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில், அந்த நபர் அங்கிருந்த ஜன்னல் வழியாக தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர், அக்டோபர் 20 : கோயம்புத்தூரில் (Coimbatore) மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி, கழிவறையில் உள்ள ஜன்னல் வழியாக தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச் சென்ற அந்த குற்றவாளி தலைமறைவாக இருந்த நிலையில், போலீசார் அவரை மீண்டும் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், மருத்துவ பரிசோதனையின் போது சிறை கைதி தப்பிச் சென்ற சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மருத்துவ பரிசோதனையின் போது தப்பி ஓடிய கைதி
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் கிரண் என்ற நபரை போலீசார் நேற்று (அக்டோபர் 19, 2026) திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், அவரை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக சூலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது பரிசோதனைக்காக உள்ளே சென்ற கிரண், அங்கிருந்த ஜன்னல் வழியாக வெளியே தப்பிச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க : தவெக பலத்தை உயர்த்த காய் நகர்த்தல்.. அதிமுக எம்எல்ஏக்கள் கட்சி மாற வாய்ப்பு.. அமைச்சர் ஷாஜகான்!




விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்திய போலீசார்
அவர் தப்பிச் சென்றதை அடுத்து கடும் அதிர்ச்சிக்கு உள்ளான போலீசார், கிரணை விடிய விடிய அவரை வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் தான், இன்று (அக்டோபர் 20, 2026) அதிகாலை அவர் கருமத்தம்பட்டி அருகே பதுங்கி இருந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், கிரணை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க : தவெகவில் பதவி ஆசை காட்டி பலாத்காரம்.. கருவை கலைத்து கொலை மிரட்டல்.. அரக்கோணம் ஒன்றிய செயலர் மீது புகார்!
தப்பியோடிய குற்றவாளியை கைது செய்த போலீசார், அவரை மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், அவரிடம் தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளி தப்பிச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.