ஆயுத பூஜை கூட்ட நெரிசல்: சென்னை எழும்பூர் – திருச்சி இடையே இன்று முன்பதிவில்லா சிறப்பு ரயில்
Ayudha Puja Special Train : ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைக் காலக் கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில், சென்னை எழும்பூர் – திருச்சி இடையே அக்டோபர் 20, 2026 இன்று முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை, அக்டோபர் 20 : ஆயுத பூஜை (Ayudha Puja), விஜயதசமி பண்டிகைக் காலக் கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில், சென்னை எழும்பூர் – திருச்சி இடையே அக்டோபர் 20, 2026 இன்று முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண் 06196 கொண்ட இந்த மெமு சிறப்பு ரயில், சென்னை எழும்பூரிலிருந்து இன்று காலை 11.15 மணிக்குப் புறப்பட்டு, இரவு 7.35 மணிக்குத் திருச்சி சென்றடையும்.
எங்கெல்லாம் நிற்கும்?
இந்த ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருவெறும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மற்றும் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு இந்தச் சிறப்பு ரயில் பெரிதும் உதவியாக இருக்கும்.




இதையும் படிக்க : தவெக பலத்தை உயர்த்த காய் நகர்த்தல்.. அதிமுக எம்எல்ஏக்கள் கட்சி மாற வாய்ப்பு.. அமைச்சர் ஷாஜகான்!
தெற்கு ரயில்வே அறிவிப்பு
Unreserved MEMU Special trains for the Pooja Festival! 🚆
Tiruchchirappalli – Chennai Egmore Unreserved MEMU Special (06195) and Chennai Egmore – Tiruchchirappalli Unreserved MEMU Special (06196), on demand, with 12-car MEMU rakes.
#SouthernRailway #MEMUSpecial #PoojaFestival #IndianRailways
— Southern Railway (@GMSRailway) October 19, 2026
முன்பதிவு தேவையில்லை
இது முன்பதிவில்லாத ரயில் என்பதால், பயணிகள் ரயில் நிலையப் பயணச்சீட்டு கவுன்ட்டர்களிலோ, யுடிஎஸ் செயலி மூலமோ சாதாரணப் பயணச்சீட்டு எடுத்துப் பயணிக்கலாம். இந்தத் தகவலைத் திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
மும்பை – சென்னை இடையே சிறப்பு ரயில்
மேலும் மும்பையில் இருந்து அக்டோபர் 21, 2026 மற்றும் அக்டோபர் 28, 2026 ஆகிய தேதிகளிலும், நவம்பர் 04, 2026, மற்றும் நவம்பர் 11, 2026 மற்றும் நவம்பர் 18, 2026 ஆகிய தேதிகளிலும் நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல மறுமார்க்கமாக சென்னை கடற்கரையில் இருந்து அக்டோபர் 22, 2026 மற்றும் அக்டோபர் 29, 2026 ஆகிய தேதிகளிலும், நவம்பர் 05, 2026 மற்றும் நவம்பர் 12, 2026 மற்றும் நவம்பர் 19, 2026 ஆகிய தேதிகளிலும் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 4.05 மணிக்கு சென்றடையும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த அட்டவணையின் படிதான் மும்பை மற்றும் சென்னை இடையே அந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : முதல்வர் குறித்து அவதூறு பேச்சு.. கனிமொழி- பிரியா சிரித்தது பொது வாழ்வுக்கு ஏற்ற செயல் அல்ல.. ஜெகதீஸ்வரி கண்டனம்!
இதற்கிடையே செல்போன்களில் பாடல்கள் மற்றும் வீடியோக்களைக் கேட்கும்போது ஹெட்போன்களைப் பயன்படுத்துமாறும், மற்ற பயணிகளின் வசதியைக் கருத்தில் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது., செல்போன்களில் சத்தமாகப் பேசுவது, அதிக ஒலியில் ரிங்டோன்களை வைப்பது போன்ற செயல்களைத் தவிர்க்குமாறு பயணிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. குறிப்பாக, குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகளில் இதுபோன்ற செயல்கள் மற்றவர்களுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டது.