AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னையில் இரவு நேரங்களில் தொடரும் மழை.. வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சொல்லும் தகவல்..

Northeast Monsoon: வடகிழக்கு பருவமழைக் காலத்தில் எல் நினோவின் தாக்கமும் முக்கியமாகக் கவனிக்கப்படுகிறது. பொதுவாக, பருவமழைக் காலத்தில் சென்னையில் சுமார் 85 மி.மீ. மழையும், தமிழகம் முழுவதும் சுமார் 445 மி.மீ. மழையும் பதிவாகும் எனக் குறிப்பிடப்படுகிறது. சில ஆண்டுகளில் வழக்கத்தைவிட அதிக மழையும் பதிவாகக்கூடும்.

சென்னையில் இரவு நேரங்களில் தொடரும் மழை.. வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சொல்லும் தகவல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Oct 2026 22:30 PM IST

அக்டோபர் 19, 2026: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு முதல் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

மாறும் காற்றின் திசை – இரவு நேரங்களில் தொடரும் மழை:


இந்நிலையில், அக்டோபர் 19ஆம் தேதி இரவு காற்றின் திசை கிழக்கு நோக்கி மாறுவதால், இரவு முதல் அதிகாலை வரை கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: தவெகவில் பதவி ஆசை காட்டி பலாத்காரம்.. கருவை கலைத்து கொலை மிரட்டல்.. அரக்கோணம் ஒன்றிய செயலர் மீது புகார்!

மேலும், அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்குக் காற்றின் திசை சாதகமாக மாறும் நிலையில், அக்டோபர் 20, 21 மற்றும் 22ஆம் தேதிகளில் இரவு முதல் காலை வரை நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த மழை அச்சப்பட வேண்டிய அளவுக்கு இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல் நினோ தாக்கமும்  வடகிழக்கு பருவ மழையும் – எப்படி இருக்கும்?

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் எல் நினோவின் தாக்கமும் முக்கியமாகக் கவனிக்கப்படுகிறது. பொதுவாக, பருவமழைக் காலத்தில் சென்னையில் சுமார் 85 மி.மீ. மழையும், தமிழகம் முழுவதும் சுமார் 445 மி.மீ. மழையும் பதிவாகும் எனக் குறிப்பிடப்படுகிறது. சில ஆண்டுகளில் வழக்கத்தைவிட அதிக மழையும் பதிவாகக்கூடும்.

மேலும் படிக்க: முதல்வர் குறித்து அவதூறு பேச்சு.. கனிமொழி- பிரியா சிரித்தது பொது வாழ்வுக்கு ஏற்ற செயல் அல்ல.. ஜெகதீஸ்வரி கண்டனம்!

இதற்கிடையில், பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகள் மற்றும் வடசென்னையில் நீர்நிலைகளைத் தூர்வாருதல், பாதாளச் சாக்கடைகளைச் சீரமைத்தல், மழைநீர் தேங்கும் இடங்களில் ராட்சத மோட்டார்கள் மற்றும் பம்புகள் மூலம் தண்ணீரை உடனடியாக வெளியேற்றுதல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Follow Us