சென்னை கடற்கரை முதல் மும்பை வரை.. இந்த நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!
Mumbai - Chennai Special Train | இந்திய பொதுமக்கள் மத்தியில் ரயில் போக்குவரத்து மிகவும் பிரதானமாக உள்ளது. இந்த நிலையில் தான் சென்னை கடற்கரை முதல் மும்பை வரை சிறப்பு ரயில் இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 19 : மும்பை – சென்னை (Mumbai – Chennai ) இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. அதாவது, சில குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் இந்த ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மும்பை – சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மும்பை – சென்னை இடையே சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மும்பையில் இருந்து அக்டோபர் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும், நவம்பர் 04, 11 மற்றும் 18 ஆகிய தேதிகளிலும் நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ரெட் அலர்ட்: பால், மருந்துகளை முன்கூட்டியே வாங்கி வையுங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தல்




சென்னை கடற்கரை முதல் மும்பை வரை
அதேபோல மறுமார்க்கமாக சென்னை கடற்கரையில் இருந்து அக்டோபர் 22, 29 ஆகிய தேதிகளிலும், நவம்பர் 05, 12 மற்றும் 19 ஆகிய தேதிகளிலும் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 4.05 மணிக்கு சென்றடையும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த அட்டவணையின் படிதான் மும்பை மற்றும் சென்னை இடையே அந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மதுரை – குருவாயூர் ரயிலில் விஸ்டாடோம் பெட்டி: இயற்கையை ரசித்தபடி பயணிக்கலாம்!
இந்த பொதுமக்கள் மத்தியில் ரயில் போக்குவரத்து மிகவும் பிரதானமாக உள்ள நிலையில், இந்த சிறப்பு ரயில் சேவை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.