AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கார் கண்ணாடி உடைத்து திருடப்பட்ட 10 சவரன் நகைகள்.. தசரா காண வந்த பெங்களூரு பெண்ணுக்கு ஷாக்!

10 Sovereign Gold Stolen From Locked Car | பெங்களூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தசரா பண்டிகையை காண குலசேகரப்பட்டினம் வந்துள்ளார். இந்த நிலையில், அவரது காரை உடைத்து அதில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.

கார் கண்ணாடி உடைத்து திருடப்பட்ட 10 சவரன் நகைகள்.. தசரா காண வந்த பெங்களூரு பெண்ணுக்கு ஷாக்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 19 Oct 2026 08:23 AM IST

தூத்துக்குடி, அக்டோபர் 19 : தூத்துக்குடியில் (Tuticorin) குலசேகரப்பட்டினம், தசரா திருவிழாவை காண வந்த ஆந்தி பிரதேசத்தை (Andhra Pradesh) சேர்ந்த ஐடி பெண் ஊழியரின் கார் கண்ணாடியை உடைத்து, அதில் இருந்து சுமார் 10 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி, அந்த பெண்ணின் லேப்டாப்பும் திருடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தசரா திருவிழாவை காண ஆந்திராவில் இருந்து வந்த பெண்

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், டென்நேரு காஞ்சிபாடு பகுதியை சேர்ந்தவர் 26 வயதான சாய் பிரியங்கா. இவர் பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், தசரா திருவிழாவை காண அவர் பெங்களூரில் இருந்து குலசேகர்ப்பட்டினத்திற்கு வந்துள்ளார். அவர் நேற்று (அக்டோபர் 18, 2026) மாலை 5.30 மணிக்கு கருங்காலி அம்மன் கோயில் அருகே தனது காரை நிறுத்திவிட்டு, முத்தாரம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க : சென்னைக்கான ரெட் அலர்ட் வாபஸ்! மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்

காரில் இருந்து திருடப்பட்ட 10 சவரன் தங்க நகைகள்

அவர் பின்னர் இரவு 9 மணிக்கு வந்து பார்த்தப்போது அவரின் காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். மேலும் தான் காரில் வைத்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகள், வளையல்கள் மற்றும் கம்மல் உள்ளிட்ட சுமார் 10 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தததை கண்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

இதையும் படிங்க : ரெட் அலர்ட்: பால், மருந்துகளை முன்கூட்டியே வாங்கி வையுங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தல்

குற்றவாளிகளை வலைவீசி தேடும் காவல்துறை

இது தொடர்பாக சாய் பிரியங்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தசரா திருவிழாவை காண பெங்களூரில் இருந்து வந்த பெண்ணின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us