AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu weather :மக்களே உஷார்! சென்னைக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் – 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

Tamil Nadu Weather today: சென்னைக்கு இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும். அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேலும் 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Tamil Nadu weather :மக்களே உஷார்! சென்னைக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் – 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Oct 2026 15:00 PM IST

சென்னை, அக்டோபர் 18 : சென்னைக்கு இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் (Red Alert) கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும். அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேலும் செங்கல்பட்டு, திருவள்ளூர், நீலகிரி, கோவை, தேனி| ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு அக்டோபர் 18, 2026 இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குறிப்பாக அக்டோபர் 17, 2026 நேற்று வடசென்னையில் குறுகிய நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், இன்றும் அதீத மழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கை பொதுமக்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : “வாய் துடுக்காக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” – ஆர்.எஸ். பாரதியை சாடிய சண்முகம்!

5 மாவட்டங்களில் மிக கனமழை

சென்னையைத் தவிர, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் அக்டோபர் 18, 2026 இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2 நாட்களாக மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிது. பல மாதங்களாக வாட்டி வதைத்த வெயிலுக்குப் பிறகு பெய்யும் இந்த மழை, மக்களுக்கு இதமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

வடசென்னையில் கொட்டித் தீர்த்த மழை

சென்னையில் அக்டோபர் 17, 2026 நேற்று முன்தினம் மாலை பல இடங்களில் மழை பெய்தது. பகலில் வெயில் சுட்டெரித்தாலும், மாலையில் மீண்டும் கருமேகங்கள் சூழ்ந்து மழை தொடங்கியது. வழக்கத்தைவிட, குறிப்பாக வடசென்னைப் பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது. ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே சுமார் 10 செ.மீ. அளவுக்கு மழை கொட்டித் தீர்த்ததால், வடசென்னையின் பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. சில தெருக்களிலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. சென்னையில் நேற்று 6 இடங்களில் அதிகனமழை பதிவான நிலையில், இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பூந்தமல்லி அருகே போதை மாத்திரை விற்பனை.. 3 பேரை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை!

இதற்கிடையே, அரபிக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் என்றும், இதன் தாக்கத்தால் வடகிழக்குப் பருவமழை மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும், மின்கம்பங்கள், அறுந்து கிடக்கும் மின்கம்பிகள், தேங்கிய நீர் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

Follow Us