சென்னைக்கான ரெட் அலர்ட் வாபஸ்! மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்
Chennai Weather Alert : சென்னைக்கு அக்டோபர் 18, 2026 இன்று விடுக்கப்பட்டிருந்த அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் வாபஸ் பெற்றது. அதி கனமழைக்கான எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்ட நிலையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, அக்டோபர் 18 : சென்னைக்கு அக்டோபர் 18, 2026 இன்று விடுக்கப்பட்டிருந்த அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் வாபஸ் பெற்றது. அதி கனமழைக்கான எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்ட நிலையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பால் மற்றும் மருந்துகளை வங்கி வைக்குமாறு அறிவுறுத்தினார்.
சென்னைக்கான ரெட் அலர்ட் வாபஸ்!
சென்னைக்கு அக்டோபர் 18, 2026 இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும். அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரெட் அலர்ட்டை சென்னை வானிலை மையம் வாபஸ் பெற்றுள்ளது.
இதையும் படிக்க : Tamil Nadu weather :மக்களே உஷார்! சென்னைக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் – 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்




அமைச்சர்களுக்கு வாக்கி டாக்கி
சென்னையில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்ட பின், கட்டுப்பாட்டு அறையில் மக்களிடம் குறைகளை அமைச்சர் ஆனந்த் கேட்டறிந்தார் . உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததுடன் பாதுகாப்பாக இருக்குமாறும் அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தினார். மழை பேரிடரை உடனடியாக தெரிந்து கொள்வதற்கும் பணிகள் மேற்கொள்வதற்கும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கும் வாக்கி டாக்கி வழங்கப்பட்டது
சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், மழைக் கால முன்னெச்சரிக்கை தொடர்பாகப் பொதுமக்களுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளுக்குப் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், குழந்தைகளுக்கான பால், முதியவர்களுக்கான மருந்துகள் போன்றவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக சென்னைக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் முதல்வர் விஜய் வடகிழக்கு பருவ மழை மழைக்காக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ரிப்பன் மாளிகையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கனமழை பெய்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். அப்போது அமைச்சர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிக்க : சென்னையில் கனமழை எதிரொலி.. அமைச்சர்கள் உடனே திரும்ப முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!
இந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை சென்னைக்கு விரைந்தது வந்துள்ளனர். குறிப்பாக அரக்கோணத்தில் இருந்து 90 வீரர்கள் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். வேளச்சேரியில் ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ள நிலையில் மேலும் 3 குழுக்கள் வருகை தந்துள்ளன. சென்னைக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் வேளச்சேரியில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக படகுகள், உயிர்காக்கும் உபகரணங்களுடன் 30 பேர் கொண்ட குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.