AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

200-க்கும் மேற்பட்ட கேள்விகள்.. கண்ணீர் விட்டு அழுத ஜெம் வீரமணி? விசாரணையில் வெளியான தகவல்கள்!

Gem Veeramani Case: ஜெம் வீரமணியிடம் 200-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் வீரமணியிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது.  விசாரணையின்போது அவர் கண்ணீர் விட்டு அழுதபடி சில தகவல்களைத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் பணம் பரிமாற்றம் குறித்தும் விசாரணையில் கேள்வி எழுப்பப்பட்டது.

200-க்கும் மேற்பட்ட கேள்விகள்.. கண்ணீர் விட்டு அழுத ஜெம் வீரமணி? விசாரணையில் வெளியான தகவல்கள்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 18 Oct 2026 11:41 AM IST

அக்டோபர் 18, 2026: சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணியிடம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் சுமார் 14 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணையின்போது 200-க்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அவருக்கு எதிராகப் பதிவாகியுள்ள புகார்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் தொடர்பாகவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு

கடந்த பல ஆண்டுகளாகச் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக வீரமணி மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கிராமப்புறங்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளுக்கு கல்வி உதவி வழங்குவதாகக் கூறி அவர்களைச் சென்னைக்கு அழைத்து வந்ததாகவும், பின்னர் அவர்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் புகார்கள் தெரிவிக்கின்றன.

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வாடகைக்குப் பெறப்பட்ட தனி பங்களாவில் இந்தச் சம்பவங்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வீரமணி மட்டுமின்றி அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கும் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

10 சிறுமிகள் புகார்.. பல்வேறு வழக்குகள் பதிவு

இதுவரை 10 சிறுமிகள் வீரமணிக்கு எதிராகச் சிறப்புப் புலனாய்வுக் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களிடம் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஆறு போக்சோ வழக்குகள் உட்பட ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவற்றில் நான்கு வழக்குகளில் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வழக்கில் சிறுமியைத் தற்கொலைக்குத் தூண்டியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

14 மணி நேரம்.. 200-க்கும் மேற்பட்ட கேள்விகள்

வீரமணியிடம் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உதவி ஆணையர் காயத்ரி தலைமையிலான காவல்துறையினர் சுமார் 14 மணி நேரம் விசாரணை நடத்தி, 200-க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுமிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், வழக்குகளை முடித்து வைக்கப் பணம் கைமாறியதாகக் கூறப்படும் தகவல்கள், நகைக்கடையில் இருந்த தங்கக் கட்டிகள் தொடர்பான விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: பூந்தமல்லி அருகே போதை மாத்திரை விற்பனை.. 3 பேரை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை!

மேலும், 200-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் வீரமணியிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது.  விசாரணையின்போது அவர் கண்ணீர் விட்டு அழுதபடி சில தகவல்களைத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

ரூ.120 கோடி பணப் பரிமாற்றம் தொடர்பாக விசாரணை

வீரமணி கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் சுமார் ரூ.120 கோடி வரை பணம் கைமாறியிருக்கலாம் என்ற தகவல் காவல்துறையினருக்குக் கிடைத்தது. இந்தப் பணப் பரிமாற்றம் தொடர்பாக யார் யாருக்குப் பணம் வழங்கப்பட்டது, அதில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க: “வாய் துடுக்காக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” – ஆர்.எஸ். பாரதியை சாடிய சண்முகம்!

இந்த விவகாரத்தில் நிதிப் பரிவர்த்தனைகள், ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் விசாரணை நடத்தப்படுமா?

வீரமணியிடம் காவல் விசாரணை நிறைவடைந்துள்ளதா என்று சிறப்புப் புலனாய்வு அதிகாரிகளிடம் கேட்கப்பட்டபோது, தேவைப்பட்டால் மீண்டும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதால், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மற்றும் தேவையற்ற கருத்துகளைப் பொதுவெளியில் வெளியிட வேண்டாம் எனச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள், பல்வேறு வழக்குகள் மற்றும் பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணைகள் என ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வழக்கின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் காவல்துறையினரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Follow Us