AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுரை – குருவாயூர் ரயிலில் விஸ்டாடோம் பெட்டி: இயற்கையை ரசித்தபடி பயணிக்கலாம்!

Vistadome Train Coach : பயணத்தின்போது வெளிப்புற இயற்கைக் காட்சிகளை முழுமையாக ரசிக்கும் வகையில், அகன்ற கண்ணாடி ஜன்னல்களும் கண்ணாடி மேற்கூரையும் கொண்ட 'விஸ்டாடோம்' சொகுசுப் பெட்டியை, மதுரை – குருவாயூர் விரைவு ரயிலில் (Madurai Guruvayur Express ) தெற்கு ரயில்வே அறிமுகம் செய்யவுள்ளது.

மதுரை – குருவாயூர் ரயிலில்  விஸ்டாடோம் பெட்டி: இயற்கையை ரசித்தபடி பயணிக்கலாம்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Oct 2026 18:23 PM IST

மதுரை, அக்டோபர் 18 : பயணத்தின்போது வெளிப்புற இயற்கைக் காட்சிகளை முழுமையாக ரசிக்கும் வகையில், அகன்ற கண்ணாடி ஜன்னல்களும் கண்ணாடி மேற்கூரையும் கொண்ட ‘விஸ்டாடோம்’ சொகுசுப் பெட்டியை, மதுரை – குருவாயூர் விரைவு ரயிலில் (Madurai Guruvayur Express ) தெற்கு ரயில்வே அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ரயிலில் விஸ்டாடோம் பெட்டி இணைக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பயணிகள் சேவையை மேம்படுத்தவும், ரயில் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது தற்காலிகமாக, சோதனை அடிப்படையில் இந்தப் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படவுள்ளது. மதுரை – குருவாயூர் – மதுரை விரைவு ரயிலில் (16327/16328) அக்டோபர் 22, 2026 முதல் இந்தப் பெட்டி இணைக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : நள்ளிரவில் களமிறங்கிய மாநகராட்சி அதிகாரிகள்.. 273 இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றம்!

எந்தெந்த நாள்களில் இந்த ரயில் இயங்கும்?

  • மதுரையிலிருந்து புறப்படும் ரயில் அக்டோபர் 22, 2026 முதல் ஜனவரி 15, 2027 வரை, வாரந்தோறும் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 4 நாட்கள் விஸ்டாடோம் பெட்டியுடன் இயக்கப்படும்.
  • மறுமார்க்கமாக குருவாயூரிலிருந்து புறப்படும் ரயில் அக்டோபர். 23, 2026 முதல் ஜனவரி 16, 2027 வரை, வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 4 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

 

விஸ்டாடோம் பெட்டி இணைக்கப்படுவதைத் தொடர்ந்து, இந்த ரயிலின் பெட்டி அமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இனி இந்த ரயிலில்:

எக்ஸிகியூட்டிவ் ஏசி சேர் கார் வகை விஸ்டாடோம் பெட்டி – 1, ஏசி மூன்றடுக்குப் படுக்கை வசதிப் பெட்டி, ஸ்லீப்பர் வகுப்புப் பெட்டிகள் – 2, பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் – 7, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வசதிகளுடன் கூடிய பெட்டி – 1, சரக்கு மற்றும் பிரேக் வேன் – 1 என இடம் பெறும்.

விஸ்டாடோம் என்றால் என்ன?

விஸ்டாடோம் பெட்டிகளில், வழக்கமான பெட்டிகளைவிட மிகப் பெரிய கண்ணாடி ஜன்னல்களும், வானத்தைப் பார்க்கும் வகையிலான கண்ணாடி மேற்கூரையும் இருக்கும். சுழலும் இருக்கைகள் மூலம் பயணிகள் எந்தத் திசையிலும் திரும்பி வெளிப்புறக் காட்சிகளைக் காணலாம். மலைப்பகுதிகள், பசுமையான வயல்வெளிகள் வழியாகச் செல்லும் பாதைகளில் இந்தப் பெட்டிகள் பயணிகளுக்குத் தனித்துவமான அனுபவத்தைத் தரும்.

இதையும் படிக்க : 200-க்கும் மேற்பட்ட கேள்விகள்.. கண்ணீர் விட்டு அழுத ஜெம் வீரமணி? விசாரணையில் வெளியான தகவல்கள்!

முன்பதிவு தொடக்கம்

விஸ்டாடோம் பெட்டியுடன் இயக்கப்படும் இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மதுரை – குருவாயூர் இடையே பயணிப்பவர்களுக்கு, குறிப்பாகக் குருவாயூர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் இது ஒரு புதிய பயண அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us