AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆயுத பூஜை: தாம்பரம் – மானாமதுரை, எழும்பூர் – திருச்சி இடையே 8 முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்

Unreserved Special Trains for Ayudha Puja : ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தாம்பரம் – மானாமதுரை, சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி ஆகிய வழித்தடங்களில் முன்பதிவில்லாத 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆயுத பூஜை: தாம்பரம் – மானாமதுரை, எழும்பூர் – திருச்சி இடையே 8 முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Oct 2026 16:14 PM IST

சென்னை, அக்டோபர் 16 : ஆயுத பூஜை பண்டிகையை (Ayudha Puja Festival) முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், முன்பதிவில்லாத 8 சிறப்பு ரயில் சேவைகளைத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த வகையில் தாம்பரம் – மானாமதுரை, சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் முதல் ரயில் அக்டோபர் 16, 2026 இன்று மாலை தாம்பரத்திலிருந்து புறப்படுகிறது. இதுதவிர, சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவையும் இன்றும் நாளையும் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் – மானாமதுரை இடையே 2 சிறப்பு ரயில்கள்

தாம்பரம் – மானாமதுரை இடையே 06161 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் அக்டோபர் 16, 2026 இன்று மாலை 5.30 மணிக்குத் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, நாளை அதிகாலை 3 மணிக்கு மானாமதுரை சென்றடையும். மறுமார்க்கமாக மானாமதுரை – தாம்பரம் இடையே 06162 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் அக்டோபர் 17, 2026 நாளை காலை 10.45 மணிக்கு மானாமதுரையிலிருந்து புறப்பட்டு, அன்றிரவு 8.30 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.

இதையும் படிக்க : தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு.. சிறப்புப் பேருந்துகள் பற்றிய முழு வழிகாட்டி!!

தாம்பரம் – மானாமதுரை இடையே 06159 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் அக்டோபர் 17, 2026 நாளை இரவு 11.55 மணிக்குத் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, அக்டோபர் 18, 2026 ஞாயிறு முற்பகல் 11 மணிக்கு மானாமதுரை சென்றடையும். மறுமார்க்கமாக மானாமதுரை – தாம்பரம் இடையே 06160 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் அக்டோபர் 20, 2026 பிற்பகல் 2.45 மணிக்கு மானாமதுரையிலிருந்து புறப்பட்டு, அன்றிரவு 11.45 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்களில் ஒவ்வொரு ரயிலிலும் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இவை செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, மணப்பாறை, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, திருப்புவனம் வழியாக இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும்.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

 

எழும்பூர் – திருச்சிராப்பள்ளி இடையே சிறப்பு ரயில்

சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி இடையே 06191 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் அக்டோபர் 16, 2026 இன்று இரவு 7 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு, அக்டோபர் 17, 2026 நாளை அதிகாலை 4.05 மணிக்குத் திருச்சி சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருவெறும்பூர் வழியாகச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமார்க்கமாக திருச்சிராப்பள்ளி – சென்னை எழும்பூர் இடையே 06192 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் அக்டோபர் 17, 2026 நாளை காலை 5.50 மணிக்குத் திருச்சியிலிருந்து புறப்பட்டு, அன்று முற்பகல் 11.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் வேறு வழித்தடத்தில், ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக இயக்கப்படும்.

இதையும் படிக்க : சென்னை காசிமேட்டில் அதிர்ச்சி.. 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. தவெக நிர்வாகி மீது பாய்ந்தது போக்சோ!!

சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி இடையே 06193 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் அக்டோபர் 17, 2026 நாளை இரவு 7 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு, அக்டோபர் 18, 2026 அதிகாலை 4.45 மணிக்குத் திருச்சி சென்றடையும். மறுமார்க்கமாக திருச்சிராப்பள்ளி – சென்னை எழும்பூர் இடையே 06194 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் அக்டோபர் 20, 2026 இரவு 10.45 மணிக்குத் திருச்சியிலிருந்து புறப்பட்டு, அக்டோபர் 21, 2026 காலை 6.50 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

இந்த இரு ரயில்களும் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருவெறும்பூர் வழியாக இயக்கப்படும். எழும்பூர் – திருச்சி வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் தலா 12 முன்பதிவில்லாப் பெட்டிகள் இருக்கும்.

Follow Us