AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நூற்றாண்டு கடந்தும் குறையாத கம்பீரம்.. 118 வது ஆண்டில் அடி எடுத்து வைத்த நீலகிரி மலை ரயில்!

Nilgiri Mountain Railway Celebrates 118th Anniversary: யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயில் சேவை தொடங்கி 118 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, மேட்டுப்பாளையத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும், உலகத் தரத்திலான பheritage சுற்றுலா மேம்பாடு மற்றும் கூடுதல் ரயில் சேவைகளை இயக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

நூற்றாண்டு கடந்தும் குறையாத கம்பீரம்.. 118 வது ஆண்டில் அடி எடுத்து வைத்த நீலகிரி மலை ரயில்!
நீலகிரி மலை ரயில்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 16 Oct 2026 11:21 AM IST

அக்டோபர், 16: இந்தியாவின் பழமையான மற்றும் உலகப் புகழ்பெற்ற மலை ரயில் சேவைகளில் ஒன்றான நீலகிரி மலை ரயில் (Nilgiri Mountain Railway), இயற்கை அழகின் கொடையான மேற்குத் தொடர்ச்சி மலையின் ஊடே சிகரங்களைக் கடந்து செல்லும் அற்புதம் வாய்ந்தது. நூற்றாண்டுகளையும் தாண்டி பாரம்பரியம் மாறாமல் இயங்கி வரும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மலை ரயில் சேவை, உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து ஈர்க்கும் இந்தியாவின் முக்கியச் சொத்தாகத் திகழ்கிறது. பச்சைக் கர தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயக்கப்படும் இந்த ரயில் பாதையானது, கடந்த 2005 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பால் ‘உலக பாரம்பரியச் சின்னம்’ என்ற பெருமைமிக்க அங்கீகாரத்தைப் பெற்றது. இந்நிலையில், இந்தச் சேவை தொடங்கப்பட்டு தற்போது 118 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் குறிக்கும் வகையில் மேட்டுப்பாளையத்தில் கேக் வெட்டி மகிழ்ச்சி கொண்டாடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் அதிரடி திருப்பம்.. கரும்பு தோட்டத்திற்குள் நுழைந்த மோப்ப நாய்.. 5வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை!!

பிரம்மாண்டமான வழித்தடம்:

நீலகிரி மலை ரயில் சேவைக்கான திட்டங்கள் மற்றும் இயக்கப் பணிகள் கடந்த 1899 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை முதன்முதலில் தொடங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் நீண்ட காலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இப்பயணம் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி உதகை வரை முழுமையாக நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் தொடங்கி உதகை வரை நீளும் இந்த 46 கிலோமீட்டர் தொலைவிலான மலைப் பாதையானது, எழில் கொஞ்சும் தேயிலைத் தோட்டங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் கண்கவர் அருவிகளுக்கு நடுவே அமைந்துள்ளது. இந்த அற்புதமான பயணத்தில் ரயில் பயணம் செய்யும் பயணிகள் 16 இருண்ட குகைகள், 250 க்கும் மேற்பட்ட பாலங்கள் மற்றும் செங்குத்தான ஆபத்தான வளைவுகள் ஆகியவற்றைக் கடந்து செல்வது சிலிர்ப்பூட்டும் அனுபவமாகும்.

சுற்றுலா மையமாக மாற்ற வலியுறுத்தல்:

118 ஆண்டுகள் கடந்துள்ள இந்த வரலாற்றுப் பாரம்பரியமிக்க மலை ரயிலை சர்வதேச அளவில் மேலும் பிரபலப்படுத்த பல்வேறு உலகத் தரத்திலான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என ஹெரிட்டேஜ் அமைப்புகளும் ரயில் ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அனைத்து ரயில் நிலையங்களிலும் தூய்மைப் திட்டங்கள், பலமொழி வழிகாட்டிப் பலகைகள், ரயில்வே ஊழியர்களுக்குச் சிறப்பு விருந்தோம்பல் பயிற்சிகள் மற்றும் வார இறுதி நாட்களில் பாரம்பரியக் கண்காட்சிகளை நடத்துவது அவசியம் என சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும், சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளில் உள்ள மலை ரயில்களைப் போல, நீலகிரி மலை ரயிலையும் உலகளாவிய ஸ்டீம் ரயில் சுற்றுலா மையமாக மாற்றி, தமிழ்நாட்டின் விரிவான சுற்றுலா வரைபடத்தோடு முழுமையாக இணைக்க வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

இதையும் படிக்க: பொதுமக்களுக்கு குட் நியூஸ்!.. மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் விற்பனை.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

118 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம்:

நீலகிரி மலை ரயில் சேவை தொடங்கி 118 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் மலை ரயில் ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒன்றிணைந்து உற்சாகமாகக் கேக் வெட்டிக் கொண்டாடினர். அப்போது சுற்றுலாப் பயணிகள் பலர் ரயிலின் ஜன்னல் வழியே உற்சாகமாகப் பார்வையிட்டுக் களித்தனர். இருப்பினும், இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட இந்த மலை ரயில் தற்போது முக்கியமாகச் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே பெருமளவில் பயன்படுவதாகவும், உள்ளூர் மக்களுக்கும் மாணவர்களுக்கும் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் உரிய நேரத்தில் சென்று வரக் கூடுதல் சேவைகள் இல்லாதது பெரும் குறையாக இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, பொதுமக்களின் நீண்டகாலத் துயரத்தைப் போக்கும் வகையில், தற்போது இயக்கப்படும் சேவைகளின் எண்ணிக்கையையும், பெட்டிகளின் எண்ணிக்கையையும் கூடுதலாக அதிகரிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

Follow Us