AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பொதுமக்களுக்கு குட் நியூஸ்!.. மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் விற்பனை.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

TN Govt Subsidized Grocery Sale: வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி கூட்டுறவு கடைகள் மற்றும் அமுதம் அங்காடிகள் மூலம் பொன்னி அரிசி கிலோ ரூ.60, துவரம் பருப்பு ரூ.130, உளுந்தம் பருப்பு ரூ.140 என மலிவு விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் முழு விவரங்கள் இதோ.

பொதுமக்களுக்கு குட் நியூஸ்!.. மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் விற்பனை.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 16 Oct 2026 06:35 AM IST

அக்டோபர், 16: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் அடைந்து வரும் நிலையில், பொதுமக்களின் அன்றாட உணவுத் தேவையில் முதன்மை வகிக்கும் அரிசியின் விலையும் கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து நெல் வரத்து குறைந்ததாலும், பருவம் தவறிய மழை மற்றும் சந்தை நிலவரங்களாலும் திறந்தவெளிச் சந்தையில் கிலோவுக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வினால் நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்களின் இந்த நிதிச் சுமையைக் குறைக்கவும், திறந்தவெளியில் அரிசி விலைக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தவும் தமிழக அரசு தற்போது மிக முக்கியமான அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க: அதிமுக வளர்ச்சியில் என் பங்கு உண்டு.. ஜெயலலிதா நம்பிக்கையை காக்க ஒன்றிணையும் நேரம்.. சின்னம்மா அழைப்பு!

 கிலோ ரூ.60-க்கு பொன்னி அரிசி:

அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் பொன்னி அரிசியை, பொதுமக்கள் குறைந்த விலையில் பெறும் வகையில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அமுதம் அங்காடிகள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, உயர்தர புழுங்கல் பொன்னி அரிசி ஒரு கிலோ 60 ரூபாய் என்ற மானிய விலையில் விற்பனை செய்யப்படும். சந்தையில் பொன்னி அரிசியின் விலை கிலோவுக்கு 75 முதல் 85 ரூபாய் வரை விற்கப்பட்டு வரும் நிலையில், அரசின் இந்த நடவடிக்கை மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளிப்பதாக அமைந்துள்ளது.

மலிவு விலையில் விற்கப்படும் பொருட்கள்:

அரசின் புதிய அறிவிப்பின்படி, அரிசி மட்டுமன்றி அன்றாட சமையலுக்குத் தேவையான முக்கியப் பருப்பு வகைகள் மற்றும் மளிகைப் பொருட்களும் சந்தை விலையை விட மிகவும் குறைவான விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதன்படி, பச்சரிசி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் (தேவைக்கேற்ப 5 கிலோ வரை) விற்பனை செய்யப்படுகிறது. மேலும், NAFED நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட உயர்தரத் துவரம் பருப்பு ஒரு கிலோ 130 ரூபாய்க்கும், உளுந்தம் பருப்பு ஒரு கிலோ 140 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. இதுமட்டுமன்றி, சமையல் அத்தியாவசியப் பொருட்களான பூண்டு கிலோ 240 ரூபாய், தனியா (மல்லி) கிலோ 240 ரூபாய், காய்ந்த மிளகாய் கிலோ 330 ரூபாய் மற்றும் வெங்காயம் கிலோ 35 ரூபாய் என்ற மலிவான விலையிலும் விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் படிக்க: ஆளுநரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய் – அமைச்சரவையில் மாற்றமா?

எங்கு கிடைக்கும்? விற்பனை மையங்கள் விவரம்:

பொதுமக்கள் இந்த மானிய விலைப் பொருட்களை சுலபமாகப் பெற்றுக்கொள்ளும் வகையில், தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் 49 அமுதம் அங்காடிகள் மற்றும் 211 கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் சிறப்பு அமுதம் கடைகள் மூலமாக இவை நேரடியாக விற்பனைக்குக் கொண்டுவரப்படுகின்றன. மக்கள் தங்கள் பகுதியில் உள்ள இக்கடைகளை அணுகி தங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை நியாயமான விலையில் வாங்கிக் கொள்ளலாம். சந்தையில் செயற்கையாக விலையை உயர்த்தும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, அரசின் இந்த நேரடி தலையீடு காரணமாக திறந்தவெளிச் சந்தையிலும் அரிசி விலை விரைவில் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us