AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அதிமுக வளர்ச்சியில் என் பங்கு உண்டு.. ஜெயலலிதா நம்பிக்கையை காக்க ஒன்றிணையும் நேரம்.. சின்னம்மா அழைப்பு!

AIPTMMK General Secretary Sasikala : இந்தியாவிலேயே 3- ஆவது பெரிய கட்சியாக அதிமுக மாறியதில் எனது பங்கு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும் அதிமுக மீண்டும் மாபெரும் இயக்கமாக மாறுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார் அஇபுதமமுக பொதுச்செயலர் சசிகலா.

அதிமுக வளர்ச்சியில் என் பங்கு உண்டு.. ஜெயலலிதா நம்பிக்கையை காக்க ஒன்றிணையும் நேரம்.. சின்னம்மா அழைப்பு!
சசிகலா.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 15 Oct 2026 19:09 PM IST

அதிமுகவில் ஏற்பட்டு வரும் உள்கட்சி பூசல் தொடர்பாக அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: அதிமுக என்ற இயக்கம் தோற்றுவித்து 54 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 1972- ஆம் ஆண்டு எம். ஜி. ஆர். ஆல் ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. இந்த இயக்கத்தை இறுதி மூச்சு உள்ளவரை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் காப்பாற்றியுள்ளனர். இந்தியாவிலேயே 3- ஆவது கட்சியாக அதிமுகவை உருவாக்கியிருந்தனர். இதில், எனது பங்கு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. நான் நேசித்த இருவரும் தலைவர்களால் தான் இயக்கத்தை சுவாசிக்க காரணமானவர்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த இயக்கம் பல்வேறு சர்க்கல்கள், தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

அதிமுக என்றைக்கும் ஒன்றுபட வேண்டும்

இதற்கு ஒரு சிலரின் சுயநலம் மற்றும் அவர்கள் எடுத்த தவறான முடிவுகளை காரணமாகும். இந்த இயக்கத்தின் பலனை அனுபவித்த ஒரு சிலர் மட்டும் ஏதாவது ஆதாயம் தேடி கட்சியை விட்டு வெளியில் சென்று இருக்கலாம். ஆனால், அதே வேளையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் வந்த தொண்டர்கள் தற்போதும் நம்பிக்கையோடும், உறுதியோடும் தொடர்ந்து பயணித்து வருகின்றனர். அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே எண்ணம் இந்த இயக்கம் என்றைக்கும் ஒன்றுபடும் என்பதாகும்.

மேலும் படிக்க: சி.வி சண்முகத்துக்கு பேரிடி.. ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம்… எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு!

பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள், விலக்கி வைக்கப்பட்டவர்கள், ஒதுங்கி நிற்பவர்கள் என அனைவரும் ஒன்றுசேரும் காலம் எப்போது என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, தற்போது வரை நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி வரும் காலங்களில் நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை மனதில் வைத்து அதிமுகவின் தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றிட அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.

தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி

இதற்கு மேலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அதிமுகவை காப்பாற்றுவது மிகவும் கடினமாகிவிடும். இன்னும் நூற்றாண்டுகள் ஆனாலும் அதிமுக என்ற இயக்கம் மக்களுக்காகவே இயங்கும். ஜெயலலிதாவின் இந்த நம்பிக்கை என்றைக்கும் வீண் போய்விடக் கூடாது என்பதை மிகவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். அதிமுக மீண்டும் ஒன்றுபட்ட, வலிமைமிக்க, பெரும் இயக்கமாக வளர வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: நெல்லையில் கஞ்சா வழக்கில் கைதான நபர்.. கால் முறிவால் மருத்துவமனையில் சிகிச்சை.. திடீரென எடுத்து விபரீத முடிவு!

Follow Us